தாயும் நீயே சுவற்றையம்பதியாளே..!!

இவள் எம் துரந்தரி ...அதனால்
நிதம் இவள் பதம் பணிவோம்
சுமங்கலி நின் கடைகண்ணால்
சுபம் தரும் நிரந்தரி அன்பால்....

எமக்கு இவள் தாய் ...அதைவிட
எம்குறை தீர்த்த பேரரசி இவள்....
வெள்ளி செவ்வாய் இவள் பார்வை
வெள்ளிடை மடை திறக்கும்..

பூசையில் இவள் புனிதவதி
பூர்வ பலன் தரும் துர்க்கை...
காதல்கொண்டால் கைவிடமாட்டாள்
காதலித்து வணங்கிட கனகதுர்க்கை....

கி.த.கவிமாமணி .

No comments

Powered by Blogger.