ஜனாதிபதியுடன் இந்திய பிரதமர் சந்திப்பு!

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (09) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.


ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மிகுந்த உற்சாகமாக வரவேற்றார்.


மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளுடன் இந்திய பிரதமருக்கான இந்த வரவேற்பு இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இரு தலைவர்களும் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை அடையாளப்படுத்தும் முகமாக ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் இருநாட்டுத் தலைவர்களும் மரக்கன்றொன்றினை நாட்டினர்.
No comments

Powered by Blogger.