அன்பு டூ அளவுக்கு மீறிய சந்தேகம்: பெண்களின் பிரேக்-அப்??📷

''எங்கிருந்தாலும் வாழ்க' என்கிற கான்செப்ட்டே இன்றைக்கு இல்லை.''

''னக்கும் எனக்கும் ஒத்துவராது; ஒத்து வரும்னு தோணல; ஸோ, பிரேக் அப் பண்ணிக்கலாம்''- இந்தத் தலைமுறை காதல் தோல்வி 'பிரேக் - அப்' என்கிற ஒற்றை வார்த்தையில் ஓர் உறவை முறித்துக் கொள்கிறது அல்லது முடித்துக் கொள்கிறது. காதல் போயின் சாதல் என்று உயிரை விடுவதற்கும், ஆசிட், கத்தி என்று உயிரை எடுப்பதற்கும் பிரேக் அப் நல்லதுதான். அதே நேரம், இன்றைய பெண்களை, 'ஒரு காதலுக்கு பிரேக் - அப்' சொல்ல வைக்கிற புற மற்றும் அகக் காரணிகள் என்னென்ன... மேரிட்டல் சைக்காலஜிஸ்ட் வாசுகி மதிவண்ணன் சொல்கிறார். 
''இன்றைக்கு இருபதுகளில் இருக்கிற பெண்கள் காதலையும் வேக வேகமாகச் சொல்கிறார்கள். பிரிவையும் வேக வேகமாக முடிவெடுக்கிறார்கள்.  'சம்பந்தப்பட்ட ஆணுக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம்; அல்லது 'நாம பிரிஞ்சுடலாம்' என்று சொல்வதற்கு முன்னால் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம்' என்கிற நிதானம் குறைந்து போய்விட்டது. இதற்கு, அவர்களுடைய உணர்வுகளை உடனுக்குடன் சொல்வதற்கு உதவிச் செய்கிற செல்போனைத்தான் குறை சொல்ல வேண்டும். (இந்த நியாயம் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் சேர்த்துத்தான்) பிரேக் - அப்பை உடனே சொல்வதற்கு உதவி செய்கிற அதே செல்போன்தான், இன்றைக்குப் பல காதலரிடையே பிரிவு ஏற்படுவதற்கும் காரணமாகி விட்டது. 
சைக்காலஜிஸ்ட் வாசுகி மதிவண்ணன்மெசேஜ் போட்டு உடனே ரிப்ளை வரவில்லையென்றால் டென்ஷனாகி விடுகிறார்கள். 'நான் மெசேஜ் போடறப்போ நீ ஆன்லைன்ல தான் இருந்திருக்கே. ஆனா, எனக்கு ரிப்ளை பண்ணலை. அப்ப யார்கூட சாட் பண்ணிக்கிட்டிருந்தே...' என்பதில் ஆரம்பிக்கிறது இன்றைய பிரேக் அப்-கள். 
என்னதான் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் இரண்டு பேருமே இரண்டு தனித்தனி மனிதர்கள். காதலைத்தாண்டி குடும்பம், வேலை, நண்பர்கள் என்று எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன அல்லவா..?  
என்னிடம் கவுன்சலிங் வருகிற பெண்கள், 'நாலு வருஷம் காதலிச்சோம். கல்யாணத்துக்கு அப்புறம்தான் இவரோட இன்னொரு முகமே தெரிஞ்சது' என்பார்கள். காதலிக்கும்போது பாசிட்டிவ் பக்கம்  மட்டும்தான் தெரியும். நெகட்டிவ் பக்கம் தெரிஞ்சாலும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள். தவிர, காதலிக்கும்போது அந்த நபருடன் 24 மணி நேரமும் தொடர்ந்து இருக்கப் போவதில்லை. ஆனால், கல்யாணமாகி விட்டால் அதிகபட்ச நேரம் அவரோடுதான் இருக்கப் போகிறீர்கள். அதனால், இதுவரை கவனிக்காமல் விட்ட, கண்டுகொள்ளாமல் விட்ட எல்லா நெகட்டிவ்களும் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.  தவிர, பெண்கள் பக்கமும் சில தவறுகள் இருக்கின்றன'' என்கிற வாசுகி, அவை பற்றியும் சொன்னார். 
''இன்றையப் பெண்களிடம் ஒரு இயல்பு உருவாகியிருக்கிறது.  இவர்களுக்கு எதிலும் திருப்தியில்லை. இதுவும்கூட பிரேக் - அப்களுக்கு முக்கியமான காரணம்தான். 
பெண்கள் பிரேக் அப் சொல்வதற்கான காரணங்கள்
பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கட்டாயம் தேவை. ஆனால், ஒரு  சிலருக்கு அது 'டோன்ட் கேர்' ஆட்டிடியூடை கொடுத்து விடுகிறது. ஒருவரை ஒருவர் சார்ந்து  வாழ்வதும் ரிலேஷன்ஷிப்பில் ஒரு அங்கம்தான்.  
காதல்






'எங்கிருந்தாலும் வாழ்க' என்கிற கான்செப்ட்டே இன்றைக்கு இல்லை. 'அவனுக்கு இன்னொரு பொண்ணோட கல்யாணம் ஆகப்போகுது. அவன் எப்படி நிம்மதியா வாழ்ந்துடறான்னு பார்க்கிறேன்' என்கிறார்கள். 
இவை எல்லாவற்றையும்விட இன்றைய பெண்கள், பிரேக் அப் சொல்வதற்கு இன்னும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன.  ஆண்களின் அதீத அன்பு என்கிற பொசஸிவ்னெஸ் மற்றும் சந்தேகம் என்கிற இரண்டும்தான் அவை. காலங்காலமாக இருக்கிற விஷயங்கள். ஆனால்,  இன்றைக்கு அதன் முகம் வேறு மாதிரி மாறியிருக்கிறது. 
' நான் உன் மேலே ரொம்ப பொசஸிவா இருக்கேன். அதனால, நான் நினைக்கிற மாதிரித்தான் நீ செய்யணும். மத்த பசங்ககிட்டே பேசக்கூடாது...' - இதன் பெயர் அதீத அன்பு கிடையாது. சந்தேகம். அதீத அன்பு தன் துணையைப் புரிந்துகொள்ளும்.  அவர்களை சுதந்திரமாக விடும். 
'நான் போன் பண்ணா எடுக்கணும். காலையில மறக்காம குட் மார்னிங் மேசேஜ் அனுப்பணும்.  நைட் குட் நைட் சொல்ல மறந்துட்டே,  அப்ப நீ என்னை மறந்துட்டே. புரொஃபைல் பிக்சரை மாத்தினதை ஏன் சொல்லலை. அந்த டிபியை எனக்குத் தெரியாம எப்ப எடுத்தே' என்பதும் அன்பு கிடையாது. உறவை மூச்சு முட்ட வைக்கிற எதிர்பார்ப்பு. 
காதலியோ, மனைவியோ அவளுடைய போனை அவளுக்குத் தெரியாமல் எடுத்துப் பார்ப்பது; மெயிலை செக் செய்வதெல்லாம் சரி என்றா நினைக்கிறீர்கள்? வேலைக்குப் போகும் பெண்கள் பல இடங்களுக்கு செல்ல வேண்டி வரும்; பல பேரை மீட் பண்ண வேண்டி வரும். இதில் சந்தேகம் வந்தால், பிரேக் - அப்பும் பின்னாலேயே தான் வரும்'' - அழுத்தமாகச் சொல்லி முடித்தார் சைக்காலஜிஸ்ட் வாசுகி மதிவண்ணன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.