மட்டக்களப்பில் அரேபியர் பயன்படுத்தும் வாள்கள் மீட்பு!!

மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வாள்கள், ஜெலக்னைட் குச்சிகள், டெட்டனேற்றர்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் நேற்று (27.06.19) குற்றப் புலனாய்வு பிரிவினரால் மீட்டுள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதலில் தொடர்புடைய சஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட முகமட் மில்கான் என்பவரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் பெருமளவு வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


 இதனை அடுத்து மட்டக்களப்பு, காத்தான்குடி காவற்துறைப் பிரிவிலுள்ள ஓல்லிக்குளம் பகுதியில் சஹ்ரானின் தங்குமிடான முகாம் ஒன்றை கடந்த மாதம் காவற்துறையினர் கண்டுபிடித்தனர். 

இந்த நிலையில் நேற்று கொழும்பில் இருந்து முகமட் மில்கானை அழைத்து செல்லப்பட்டு, இந்த முகாம் பகுதியில் நிலத்தை தோண்டும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் போது எஸ்லோன் பைப்பில் அடைத்து பாதுகாப்பாக நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 392 ஜெலக்னைட் குச்சிகள், எட்சோட் ரக வெடிமருந்து 8 கிலோ, சேருவின் 184 யார் கொண்ட 4 பக்கற்றுக்கள், ரி 56 ரக துப்பாக்கியின் 361 ரவைகள், எம் 16 ரக துப்பாக்கியின் ரவைகள் 80, திருப்பாச்சி வாள்கள் 11, சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்காக வெட்டப்படும் மதினா 19 புது வாள்கள், டெட்டனேற்றர்கள் 1500 என்பனவற்றை குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.