பேர்லின் ஈழத்தமிழர்களின் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் "கலாச்சாரங்களின் திருவிழா"!!

அன்பார்ந்த பேர்லின் வாழ் தமிழீழ மக்களே,

அன்புடையீர்,



எதிர்வரும் 09.06.2019 அன்று பேர்லின் தலைநகரத்தில் மீண்டும் 24. வது உலகப் பிரசித்திபெற்ற கலாச்சாரங்களின் திருவிழா   (Karneval der Kulturen) நடைபெறவுள்ளது. இவ் விழாவில் பல்லின சமூகத்தை கொண்ட 4200 கும் மேற்பட்ட கலைஞர்கள்  தமது தொன்மைவாய்ந்த  கலை கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தி கலந்துகொள்வார்கள் .2009 வருடங்களில் பேர்லின் வாழ் தமிழ் மூத்தோர்கள் இவ் கலாச்சாரங்களின் திருவிழாவில்  கலந்துகொண்டு  ஈழத்தமிழர்களின் கலாச்சாரத்தையும்  வெளிப்படுத்தினார்கள். "கலாச்சாரங்களின் திருவிழா" வழமையாக மே மாதம் நடுப்பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறுவதால் 2009 ஆம் ஆண்டுக்கு பின் மே 18 தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு இவ் விழாவில் நாமும் இணைந்து  செல்வதற்கான கூட்டுமனநிலை இல்லாத காரணத்தால்   ஈழத்தமிழர்களின் பிரதிநித்துவம் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்படும் இனமாக வாழும் ஈழத்தமிழர்களின் அடையாளம் தொடர்ந்தும் சர்வதேச அரங்கில் தனது இருப்பை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான "கலாச்சாரங்களின் திருவிழா"வில்    (Karneval der Kulturen) கலந்துகொள்வதன் அவசியத்தை உணர்ந்து இவ் வருடம் முதல் மீண்டும் பேர்லின் வாழ் அனைத்து மக்களின் ஆதரவுடனும் இவ் விழாவில் கலந்துகொள்ளவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அந்தவகையில் இவ் வருடம் நடைபெறும்  கலாச்சாரங்களின் திருவிழாவில்  ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எமது பாரம்பரிய கலைகளின் ஊடாக எமது கலாச்சாரத்தின் விழுமியங்களை அண்ணளவாக 1 மில்லியன்   சர்வதேச மக்கள் கலந்துகொள்ளும் பவனியில் வெளிப்படுத்துவோம். அத்தோடு அங்கு நடுவர்களால் நடைபெறும் மதிப்பீட்டு போட்டியிலும் கலந்துகொள்கின்றோம்.

யேர்மன் வாழ் ஈழத்தமிழர்களின் இருப்பை யேர்மன் மைய நீரோட்டத்திற்கு எடுத்துச்செல்லும் முயற்சியே நாம்  "கலாச்சாரங்களின் திருவிழா" வில் கலந்துகொள்வதன் பிரதான காரணமாக அமைகின்றது. யேர்மனியில் பிறந்து வளரும் எமது  எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமைக்க வேண்டிய கடமையை இப் பங்குபெற்றுதல் சரிவர செய்யும் என்பதை நாம் திடமாக நம்புகின்றோம்.

தமிழ் மக்களின் ஒற்றுமையையும் ஆற்றலையும் சக பல்லின மக்களுக்கு எடுத்துக் காட்டவும் தமிழ்ச் சமூகம் யேர்மனியில் பன்மைக்கலாச்சாரத்தில் ஒன்றிவிட்ட  சான்றை வெளிக்கொணரவும் இந்த கொண்டாட்டம் உதவுகின்றது.

அனைத்து பேர்லின் வாழ் தமிழர்களையும் இவ் விழாவில் கலந்துகொண்டு பங்காளிக்குமாறு வேண்டுவதோடு , இவ் விழாவில் தமது கலைப் படைப்புகளையும்  வழங்க விருப்புவர்கள் பின்வருமாறு தொடர்புகொள்ளவும் என அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

சென்ற வாரம் நடைபெற்ற கலாச்சாரங்களின் திருவிழா   (Karneval der Kulturen) வின் ஊடக சந்திப்பிலும் நாம் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது .

ஒருங்கிணைப்பு
முனைவர் திருமதி  அர்யலினா காண்டீபன்
0176 61739477
திரு கேசவன் நடராஜா   01732054844
திரு ரெக்ஸி பெனடிக்ட்  01716762599


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.