பெண்களுக்கான அதிகாரம் : வரைவு அறிக்கை தயாரிப்பு!

பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான தேசியக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது.

 பெண்களுக்கான கல்வி, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து போன்றவற்றை அடைந்து அதிகாரம் பெறுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது.


 இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “பல்வேறு நபர்களிடம் ஆலோசனை மற்றும் பரிந்துரைகள் பெற்று இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு, கல்வி, ஊட்டச்சத்து, பொருளாதாரம் (வேளாண் தொழில் துறை, ஊழியர், சேவைத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்), பெண்களுக்கு எதிரான வன்முறை, முடிவெடுத்தல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி புதிய வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


 வீடு, உள்கட்டமைப்பு வசதி, குடிநீர் வசதி, துப்புரவு வசதிகள், ஊடகம், கலாச்சாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களைப் பெண்களுக்குக் கொண்டுசேர்ப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளார் .

No comments

Powered by Blogger.