இங்கிலாந்து - மேற்கிந்தியதீவு அணிகள் இன்று மோதல்!!

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் தொடரில் இங்கிலாந்து- மேற்கிந்தியதீவு அணிகள் இன்று மோதுகின்றன.


இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் 16-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) சவுதம்டனில் நடைபெறும் 19-வது தொடர் போட்டியை நடத்தும் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியனான மேற்கிந்தியதீவு எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து அணி தனது முதல் தொடர் போட்டியில் 104 ஒட்டங்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது. 2-வது போட்டியில் பாகிஸ்தானிடம் 14 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. முந்தைய போட்டியில் 106 ஒட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை எளிதில் சாய்த்தது.

இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், ஜோரூட், கேப்டன் மோர்கன் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி வருகிறார்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், மார்க்வுட், பிளங்கெட் மிரட்டுகிறார்கள். இதில் மேற்கிந்தியதீவில் பிறந்து இங்கிலாந்து அணியில் சமீபத்தில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்தியதீவு அணி முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அடுத்த போட்டியில் 15 ஒட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவிடம் போராடி பணிந்தது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடந்த போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.

மேற்கிந்தியதீவு அணியில் கிறிஸ் கெய்ல், ரஸ்செல், நிகோலஸ் பூரன், பிராத்வெய்ட், ஷாய் ஹோப் ஆகியோர் நிலைத்து நின்று விட்டால் துடுப்பாட்டக்காரர்கள் உருவெடுத்து விடுவார்கள். பந்து வீச்சில் ஒஷானே தாமஸ், காட்ரெல், ரஸ்செல் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளிலும் அதிரடி துடுப்பாட்டக்காரர்களும், சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் அங்கம் வகிப்பதால், போட்டியில் அதிரடிக்கும், பரபரப்புக்கும் குறைவு இருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், ஜோஸ் பட்லர், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித் அல்லது மொயீன் அலி, மார்க்வுட்.

மேற்கிந்தியதீவு: கிறிஸ் கெய்ல், டேரன் பிராவோ, ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், ஆந்த்ரே ரஸ்செல், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.