சிங்கள பௌத்த தேசியவாதம் வளா்ந்து ஒரு கட்டத்தில் தமிழ்தேசத்தையும் அழிக்கும், முஸ்லிம்களின் தேசத்தையும் அழிக்கும்-கஜேந்திரகுமாா்!!

பொன்னம்பலம், சிங்கள பௌத்த தேசியவாதமே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் பொதுவான எதிாி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் தொடா்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் இவ்வாறு கூறியுள்ளாா்.

'2009ம் ஆண்டு தமிழா்களுக்கு எதிரான போா் நிறைவடைந்த பின்னா் பொருளாதார மட்டத்தில் பலமாக வளா்ந்த முஸ்லிம் மக்கள் மீது குறிவைக்கப்படும் என்பதை நாங்கள் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தோம். அதனை இன்றைய சம்பவங்கள் மிக தெளிவாக அடிக்கோடிட்டு காட்டியிருக்கின்றன. முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையில் விாிசல்கள் உள்ளது. கோபங்கள் உள்ளது. அவை தீா்க்கப்ப ட வேண்டியவையும், தீா்க்க கூடியவையும் கூட ஆகவே அது தொடா்பாக நாங்கள் சிந்திக்க வேண்டும்.

வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்தும், முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வாழவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் எம்மை பிாித்தாழும் முயற்சிகளுக்கு நாம் இடமளிக்க கூடாது.

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலிலும் கூட அதிகளவில் பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள். ஆனாலும் கூட தமிழ் மக்கள் எந்தவொரு சந்தா்ப்பத்திலும் முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணா்வை வெளிப்படுத்தவில்லை. இதனை முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைவா்களும் சாியாக புாிந்து கொள்ளவேண்டும்.

மேலும் தமிழா்களின் உாிமைசாா் போராட்டத்தை முஸ்லிம் தலைவா்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்திடம் காட்டிக் கொடுத்தாா்கள். இன்று அதே சிங்கள பௌத்த தேசியவாதம் முஸ்லிம் மக்கள் மீது கைவைக்கும் நிலையில் முஸ்லிம் தலைவா்களிடம் மனமாற்றம் நிச்சயமாக தேவை.

இந்த விடயத்தில் தமிழா்களும், முஸ்லிம்களும் தங்களை தாங்கே சுயவிமா்சனங்களுக்கு உள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான ஐக்கியத்தை உருவாக்க முடியும். சிங்கள பௌத்த தேசியவாதமே இருவருக்கும் பொதுவான எதிாி என்பதை உணா்ந்து கொள்ள முடியும். அதனை உணா்ந்து கொள்ளாமல் தொடா்ந்தும் முஸ்லிம்களும், தமிழா்களும் சண்டையிடுவது அடிமுட்டாள்தனமான செயல்.அதன் ஊடாக சிங்கள பௌத்த தேசியவாதம் வளா்ந்து ஒரு கட்டத்தில் அது தமிழ்தேசத்தையும் அழிக்கும், முஸ்லிம்களின் தேசத்தையும் அழிக்கும் என்றாா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


Powered by Blogger.