யேர்மன் கராத்தே சங்கத்தின் கீழ் பேர்லினில் நடைபெற்ற தமிழ் மாணவர்களுக்கான தேர்வு!!📷

சென்ற செவ்வாய்க்கிழமை அன்று யேர்மன் கராத்தே சங்கத்தின் கீழ் பேர்லின் தமிழ்  மாணவர்களுக்கான கராத்தே தேர்வு சிறப்பாக நடைபெற்றது.


கராத்தே என்பது, சண்டைக்குரிய அல்லது தற்காப்புக்கான ஒரு கலையாகும். மாணவர்களின் ஆற்றலை வளர்த்தெடுக்கவும், தன்னம்பிக்கை ஊட்டவும் திறன்வளர்ப் படிப்புகளில் ஒன்றாக தற்காப்புக் கலையான கராத்தே பேர்லினில் தமிழ் மாணவர்களுக்காக மேயர் பாரதி கலைக்கூடத்தின் முயற்சியால் பல வருடங்களுக்கு முன்பாக  ஆரம்பிக்கப்பட்டது.

அந்த வகையில் ஆரம்ப தகுதி நிலைக்கும் மற்றும் ஏனைய பட்டிக்கான தேர்வும் நடைபெற்று அனைத்து மாணவர்களும் சித்தியடைந்துள்ளார்கள். இத்  தேர்வை யேர்மன் கராத்தே சங்கத்தின் சார்பில் Sensei Johannes      Köster (6.Dan) அவர்கள் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்காப்பு கலை ஆர்வலர்களுக்கான புதிய கராத்தே பயிற்சி வகுப்புகள் கோடைக்கால விடுமுறைக்கு பின்பு 5 வயதிலிருந்து வயதெல்லையின்றி ஆண் + பெண் இருபாலாருக்கும் ஆரம்பமாக உள்ளது.

ஒவ்வொரு மாணவர்களிடமும் தனித் தனிக் கவனம் எடுக்கப்பட்டு உடல், உளம் மற்றும் அறிவு சார்ந்த விருத்திகளுக்கு கராத்தேகலை அமைகின்றது.தலைமைத்துவம் பண்பு வழி நடத்தல் வெற்றி தோல்விகளை சரிசமமாக ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் மற்றும் ஒழுக்கம் அனைத்து பிள்ளைகளுக்கும் கராத்தே கலை மூலம் உருவாக்கிக்கொள்ளலாம்.

யேர்மன் கராத்தே சங்கத்தின் அங்கீகாரத்தை பெற்றது Shi Shi no Dojo e.V. அனைத்து தேர்வுகளும்

Johannes Köster (6. Dan Shito Ryu, A Prüfer, Millenniumstrainer

1. Vorsitzender und Karatelehrer von Shi Shi no Dojo e.V.

Gründungsmitglied des Welt Shito Ryu Verbandes in Osaka (Japan)

Stilrichtungsreferent für Shito Ryu im Berliner Karate Verband (BKV) und im Deutschen Karate Verband (DKV) ) அவர்களால் நடாத்தப்படும்.

கராத்தே வகுப்புகள் நடைபெறும் இடம் :

Im Kultur- und Ökologiezentrum der UFA Fabrik - Tempelhof

Adresse: Viktoriastr. 10 - 18, 12105 Berlin

U-Bahn: U6 Ullsteinstraße

Bus: 170 Tempelhofer Damm/U Ullsteinstraße

தொடர்புகளுக்கு : சங்கர் 017621751446

No comments

Powered by Blogger.