காதல் என்றால் என்ன?

இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மை பெற்று, வளர்த்துவிடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பகத்தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை. ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண். பெற்றோரிடம் நாம் செலுத்தும் காதல் என்பது குடிநீரும், கண்ணீரும் போல… இரண்டும் ஒன்று போல் இருந்தாலும், அவை வேறுவேறு தான். ஆனால், ஆணுக்கும் – பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும் குடிநீரும் போல…ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
இந்த வேறுபாட்டைத் தான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். கடைசி வரை ஒரு உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில், அந்தக் காதல் எவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என நினைத்துப் பாருங்கள். இந்த இடத்தில் அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் அந்த காதல் நிலைக்குமா? அவர்கள் உங்களுடன் கடைசிவரை கூட வருவார்களா?
எப்போது காதல் வருவது நல்லது?
இது ஒரு முக்கியமான கேள்வி. “நான் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை. 20 வயதிலேயே வேலைக்கு சேர்ந்துவிட்டேன். இப்போது நான் சுயமாக சம்பாதிக்கிறேன். நான் தாராளமாக காதலிக்கலாம்” என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு ஆண் 25 வயதில் காதல் வயப்பட்டான் என்றால் அதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில், சம்பாதித்தால் மட்டும் போதாது. குடும்பம் என்றால் என்ன? அதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது? திருமணம் செய்தால் மனைவியின் குடும்பம் மற்றும் தமது பெற்றோரை எப்படி அனுசரித்து செல்வது என்பது போன்ற பல உறவு சிக்கல்கள் குறித்து அந்த காலக்கட்டத்தில் தான் புரிய ஆரம்பிக்கும்.
எனவே, அப்போது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துணை…அதாவது காதல், நிச்சயம் உங்கள் வாழ்வில் உண்மையாக சங்கமிக்கும். உங்கள் உடலுக்கும், மனதுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும்.
இதைவிடுத்து, காதலியை பின்னால் உட்காரவைத்து துப்பட்டாவை தலையில் சுற்றி மறைத்து அழைத்துச் செல்வது, ஓடாத படத்திற்கு கார்னர் சீட்டில் சென்று காதலியுடன் உட்காருவது, அடிக்கிற வெயிலில் பீச்சில் சென்று மறைந்து கொள்வது போன்றவற்றிற்கு பதில் தைரியமாக விபச்சார விடுதிக்கு சென்றுவிடலாம். இதனால், நமது நேரம், பணம், உழைப்பு போன்ற அனைத்தும் மிச்சமாகும் பாருங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.