தமிழினத்தை பலமிழக்க வைக்கத் துடிக்கின்றது கோடாரிக்காம்புகள்!

பிரபல ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் விலைக்கு கொள்வனவு செய்து பின்னர் அவற்றில் உண்மையாக பணிபுரிபவர்களை காத்திருந்து வெளியேற்றுவதும் தற்போது நடைபெறுகின்றது.

இது ஒருவகை தந்திரம்.

இப்படியான போக்குகளிற்குப் பின்னால் ஒரு நிகழ்ச்சி நிரல் இருப்பது கசப்பான உண்மையாகும்.

இன்று இவை பணம்கொண்டு மட்டுமே கையாளப்படுகின்றது.

தமிழ் இனத்தின் இருப்பு விலைபேசும் வியாபாரிகளின் கைகளில் விழுமா?

தற்போது பிரமாண்டமான கேளிக்கை நிகழ்வுகளை தமிழர்கள் புலம்பெர்ந்து வாழும் கண்டங்களில் நடத்தப்படுவதானது தமிழ் இளையோர்களை திசைமாறி பயணிக்க வைக்கக்கூடியதாகவிருக்கும்.

எமது இனத்தின் விடுதலைச்சிந்தனையையும் நோக்கத்தையும் இது சிதைவடையச் செய்யும்.

தமிழினத்தை பலமிழக்க வைக்கத் துடிக்கின்றது கோடாரிக்காம்புகள்!

எப்போது நாம் சிந்திப்போம்?

No comments

Powered by Blogger.