என் ஜி கே விமர்சனம் !!

சூர்யா படித்து நல்ல வேலைக்கு சென்று இயற்கை விவசாயம் செய்ய வருகிறார். அதை நன்றாகவும் செய்ய, ஆனால், பலரும் அதை எதிர்க்கின்றனர்.


அதற்கு உதவியாக எம்.எல்.ஏவிடம் போக, அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் கட்சியில் சேர்கின்றார்.

அதை தொடர்ந்து மெல்ல கட்சியில் முன்னேற, அவர் நினைத்த இடத்தை என் ஜி கே அடைந்தாரா? இது தான் மீதிக்கதை.

விமர்சனம்:

நிழல்கள் ரவி-உமாபத்மனாபன் தம்பதியின் மகனாகவும், சாய்பல்லவின் கணவராகவும் அறிமுகமாகும் சூர்யா, ஆரம்ப காட்சிகளில் குடும்ப செண்டிமெண்ட், இயற்கை விவசாயம், சமூக அக்கறை ஆகியவற்றில் ஈடுபடும்போது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

முதல் பாதியில் சூர்யா ஒரு கட்சியில் அடிமட்ட தொண்டனாக இருந்து அவர் பாத்ரூம் கழுவி முன்னேறுவது போல் காட்டியதில் செல்வராகவன் படம் என்று நம்பவைக்கிறது. அதன் பிறகு தான் வேறு இயக்குனர் எடுத்த மாதிரி திரைக்கதை அமைந்திருந்தது. இரண்டாம் பாதியில் செல்வராகவன் டச் இல்லை.சாய் பல்லவியின் அறிமுகம் மற்றும் ஆரம்பகட்ட காட்சிகள் ரொம்ப யதார்த்தம். அரசியல்வாதிகளுக்கு உதவும் கார்ப்பரேட் அதிகாரியாக வரும் ரகுல் ப்ரித்திசிங் தனது கேரக்டரை கச்சிதமாக செய்துள்ளார்.

இடைவேளை நண்பன் உயிர் விடுவது, அரசியலின் யதார்த்தம் இரண்டே கட்சி தான். சமீபத்தில் நடந்த ஒரு அமைச்சரின் பாலியல் வழக்கு என ஒரு சில விஷயங்கள் கவனிக்க வைக்கின்றது.

யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி இசையில் யுவன் மிரட்டியுள்ளார். இந்த படத்தின் முதுகெலும்பே பின்னணி இசை என்றும் கூறலாம்.

மொத்தத்தில் செல்வராகவன் படம் என்று எதிர்பார்த்து போனால் ஏமாற்றம் தான் மிஞ்சும்!
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.