நாதசுவரம் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவி.!!
நாதசுவரம் என்பது துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும்.இது நாதசுவரம், நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று பலவாறு அழைக்கப்படுவது உண்டு.
சிறப்பாகத் தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் இந்த இசைக்கருவி வழக்கில் உள்ளது.
திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது.
வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது.
தென்னிந்தியாவில் இது ஒரு மங்கலமான இசைக்கருவியாகக் கருதப்படுவதனால், பொதுவாக எல்லாவகையான நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு இடம் உண்டு.
சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகளின் போது பயன்படுகின்றது.
தவிரவும், தனிப்பட்டவர்களின் திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாகசுவரம் சிறப்பிடம் பெறுகின்றது.
இவ்வாத்தியம் முன்பு தென்னிந்தியாவிலுள்ள நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்ற சாதியரினால் வாசிக்கப்பட்டு வந்தது.
நாகத்தைப் போன்று உருவத்தைப் போன்று நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் ஏற்பட்டது.
இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.
நாதசுவரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை.
சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ இந்த இசைக்கருவி தொடர்பான தகவல் எதையும் தரவில்லை.
சிலப்பதிகாரத்தில் கூறப்படும் “வங்கியம்” என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்புபடுத்தச் சிலர் முயன்ற போதிலும் அது புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள்.
இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் இது பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை.
அத்துடன் இதன் துணை இசைக்கருவியாக விளங்குகின்ற தவிலும் கூட இத் தகவல் மூலங்கள் எதிலும் காணக் கிடைக்கவில்லை.
17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாதசங்கிரகம் என்னும் இசை நூல் துளைக் கருவிகள் பற்றிக் கூறுகின்ற போது இக் கருவியையும் நாகசுரம் என்ற பெயரில் பட்டியல் இடுகின்றது.
இதுவே தற்போதைய நிலையில், கிடைக்கின்ற முதல் வரலாற்றுக் குறிப்பு எனலாம்.
இது வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்றது எனக்கூறுவோரும் உளர்.
எனினும் இது ஷெனாயை விட அளவில் பெரியது.
இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது.
நாதசுவரம் ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது.
இதன் பாகங்கள் வருமாறு:
1. வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு.
2. உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல்
3. உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை (செப்புத் தகடு)
4. அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி.
உடலின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன.
மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை.
மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள்.
நாதசுவரத்தின் நீளம் சுமார் 2.5 அடி.
நாதசுரத்திற்கு சுருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி.
இதிலிருந்து ஆதார சுருதி மட்டும் தான் வெளிவரும்.
இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார்.
இன்று இந்தக்கருவிக்குப் பதிலாக சுருதிப்பெட்டி பயன்படுத்தப்படுகின்றது.
நாதசுவரத்துக்கு தாளக் கருவியாக அமைவது தவில் (அல்லது தவுல்) என்ற தோற்கருவியாகும்.
இதனால் நாதசுவர இசைக்கலைஞர்கள் பொதுவாகத் தவில் இசைக் கலைஞருடன் சேர்ந்து குழுக்களாகவே செயல்படுவது வழக்கம்.
நாதசுவரக் கலைஞர், ஒத்து வாசிப்பவர், தவில் வித்துவான், தாளக் கலைஞர் (ஜால்ரா) ஆகிய நால்வரும் ஒன்று சேர்ந்த இசைக்குழுவைப் பெரியமேளம் என அழைப்பர்
நாதசுவரக் கருவி ஆச்சா மரத்தில் செய்யப்படும்.
இம்மரமும் வெட்டப்பட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகே இக்கருவி செய்யப் பயன்படும்.
இக்கருவியின் மேல் பகுதியை உளவு என்றும், கீழ்ப்பகுதியை அணசு என்றும் கூறுவர்.
உளவுப் பகுதியில் 12 துளைகள் அமைக்கப்படும்.
இக்கருவியின் அளவிற்கேற்ப பல வகைப்படுகின்றன.
முகவீணை
திமிரி நாயனம்
பாரி நாயனம்
இடைப்பாரி நாயனம்
மத்திம சுருதி நாயனம்
என்ற பெயர்களுடன் வழங்கி வருகின்றனர்.
நாதசுவரத்தின் மேல் பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படும்.
இது ஒரு வகை நாணல் என்ற புல் வகையால் செய்யப்படும். இந்த நாணலைக் ‘கொறுக்கைத் தட்டை’ என்பர்.
இதனை ஆற்றங்கரையிலிருந்து கொண்டு வந்து பக்குவப்படுத்துவர்.
இச்சீவாளியையும் நாதசுவரத்தையும் இணைக்கும் கெண்டை என்ற பகுதி சீவாளியோடு இணைக்கப்பட்டிருக்கும்.
நாதசுவரம் குழல், திமிரு மற்றும் அனசு எனும் மூன்று பாகங்களைக் கொண்டது.
இது ஏறத்தாழ கூம்பு வடிவிலான மரமாகும்.
கீழ் பகுதியிலிருந்து மேல் நோக்கி சிறிது சிறிதாக குறைந்து இவ் வடிவத்தினை இது பெறுகின்றது.
மேல் பகுதி வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற உலோக உருண்டை அமையப்பெற்று இருக்கும்.
பல ஓய்வு நாணல்களும் நாதஸ்வரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
அவற்றுடன் சிறு தந்ததினாலான் கூம்பு இருக்கும் இவை நாணலினில் உள்ள எச்சில் மற்றும் தூசு குப்பைகளை நீக்கி சரியான காற்று போகும் அளவுக்கு திருத்த கொடுக்கப்பட்டிருக்கும்.
இவற்றுடன் ஒரு உலோக மணியும் பொருத்தப்பட்டிருக்கும். பாரம்பரியமாக நாதஸ்வரத்தின் உடல் வன்மரத்தினால் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது மூங்கில், சந்தனமரம், தாமிரம், பித்தளை, கருங்காலி மற்றும் ஐவரி ஆகியவற்றிலும் செய்து பயன்படுத்தப்படுகின்றன.
நாதஸ்வரத்தில் ஏழு விரல் துளைகளும், ஐந்து கூடுதல் ஓட்டைகளும் போடப்பட்டிருக்கும். ஐந்து கூடுதல் ஓட்டைகளையும் தேவையானபொழுது பயன்படுத்திக்கொள்ள மெழுகு கொண்டு அடைத்திருப்பர்.
பான்சூரி புல்லாங்குழல் போன்று இரண்டரை எல்லை ஓட்டைகளும் போடப்பட்டு இருக்கும்.
நாதசுவரத்தில் இரண்டு வகைகள் உண்டு:
திமிரி, பாரி.
திமிரி நாதசுவரம் உயரம் குறைவாகவும், ஆதார சுருதி அதிகமாகவும் இருக்கும்.
பாரி நாதசுவரம் உயரம் அதிகமாகவும், ஆதார சுருதி குறைவாகவும் இருக்கும்.
பிரபல நாதசுவரக் கலைஞர்கள்
தென்னிந்தியா
டி. என். ராஜரத்தினம் பிள்ளை
சேக் சின்ன மௌலானா
திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை
காரைக்குறிச்சி அருணாசலம்
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்
எஸ். ஆர். ஜி. சம்பந்தம் & எஸ். ஆர். ஜி. ராஜண்ணா
மாம்பலம் எம். கே. எஸ். சிவா
தேசூர் டி. எஸ். டி செல்வரத்தினம்
திண்டிவனம் ஏ. எஸ். ராமலிங்கம்
மன்னார்குடி எம். எஸ். கே. சங்கரநாராயணன்
காஞ்சி எஸ். சண்முகசுந்தரம்.
யாழ்ப்பாணம்
வி. கே. கானமூர்த்தி
வி. கே. பஞ்சமூர்த்தி
அளவெட்டி என்.கே. பத்மநாதன்
நாதசுவரம் மங்கல இசைக்கருவியாக பயன்படுகிறது.
கோவில்கள் சுப நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்த ஏற்ற இசைக்கருவியாகும்.
நாதசுவரங்கள் உட்புற நிகழ்ச்சிகளை விட திறந்த வெளிகளில் பயன்படுத்த மிகவும் ஏற்றதாகும்.
ஏனெனில் இவற்றின் இசை பெருக்கும் திறன் அதிகமாகும்.
via- சிறீ சிறீஸ்கந்தராஜா
.jpeg
)





கருத்துகள் இல்லை