வட சென்னை பகுதியில் இளம் பெண்களுக்கு கல்வி விழிப்புணர்வு பயிற்சி!!📷

பெரம்பூர், ராயபுரம் , தொண்டையார்பேட்டை, மாதவரம், கொடுங்கையூர் ஆகிய வட சென்னை பகுதியில் வசிக்கும் இளம் பெண்களுக்கு கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை உதயன் அறக்கட்டளையினால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
இன்று மாணவர்களுடன் இந்தப் பட்டறையில் இரண்டரை மணி நேரங்கள் உரையாற்றினேன். தொழில் மேம்பாடு, கல்வியில் ஒழுங்கு, உயர் கல்வித் துறைகள், திறமான செயல்பாடு,நேர மேலாண்மை, என்ற வகையில் எனது உரை அமைந்திருந்தது. மாணவியரில் பலர் மிக மிக துல்லியமான பல கேள்விகளை கேட்டு தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

ஒவ்வொருவரும் மிகச் சிறந்த முறையில் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆர்வத்துடன் செயல்படும் இளம்பெண்கள். 16 , 17 ,18 வயது பெண்கள் தங்கள் வாழ்வில் மிகச் சிறப்பாக பயிற்சி பெற வேண்டும், கல்வியால் உயர்வடைய வேண்டும் என்ற தீவிர ஆர்வத்துடன் செயல்படுகின்றனர்.

இவர்களுடன் இன்றைய காலைப் பொழுதை செலவிட்டதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த நிகழ்ச்சிக்கு நான் கட்டாயம் வந்து மாணவர்களை சந்திக்க வேண்டும் என்று என்னை கேட்டு கொண்ட திரு சௌந்தரராஜன் (இன்னம்பூரான்) அவர்களுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். 87 வயதிலும் மாணவியரின் கல்வி நலனுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி இவர்.


No comments

Powered by Blogger.