தமிழர்களிற்கு முஸ்லிம் தலைவர்களின் ஒற்றுமை ஒரு பாடம்!!
முஸ்லிம் அரசியல் தரப்பின் ஒற்றுமை தமிழர் தரப்பிற்கும் ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் முன்னாள் மாகாண அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன், தமிழர் தரப்பில் தேசியம் என்ற நிலைப்பாட்டிலுள்ள கட்சிகள் கூட ஒரு பொது வேலைத் திட்டத்தில் ஒன்றுபட முடியாமலிருப்பது துரதிஸ்டவசமானது என்றார்.
யாழ். கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆளுநர்கள் இவரும் மற்றும் அமைச்சர் ஒருவரையும் பதவி நீக்க வேண்டுமென வலியுறுத்தி அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருந்தார். இது தென்னிலங்கையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேநேரம் இந்த தேரரின் போராட்டத்திற்கு ஆதரவாக ஞானசார தேரரும் குரல் கெடுத்து இலங்கை அரசிற்கும் காலக்கெடுவுடன் கூடிய எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
இதனால் நிலைமை மேலும் கொந்தளிப்பாகியதை அடுத்து குறித்த அமைச்சர் மற்றும் இரண்டு ஆளுநர்களும் என மூவர் மட்டுமல்லாது அரசில் அங்கம் வகித்த இஸ்லாமிய அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு இராஐினாமா செய்திருந்தார்கள். இங்கே குறிக்கப்பட்ட அமைச்சர்களுக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லயா என்பது ஒரு விசாரணையின் பின்னர் தான் அறியப்பட வேண்டிய ஒன்று.
ஆனால் காலங்காலமாக இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகளின் ஆதிக்கம் எவ்வாறு செலுத்தப்பட்டு வந்ததென்பதற்கு இதுவொரு சாட்சியாக இருக்கின்றது. இது நிச்சயமாக இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகத் தான் நான் பார்க்கின்றேன். எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் இனப்பிரச்சனைக்கான தீர்வு இன்னமும் முன்வைக்கப்படவில்லை.
இங்கு தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எட்டப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அல்லது இது தொடர்பாக பேசப்படுகின்ற சூழ்நிலைகளில் எல்லாம் பௌத்தமத குருமார்கள் தான் அவற்றை எதிர்ப்பவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
இன்னுமொரு தடவை எங்களுக்கான தீர்வு சாத்தியமாகக் கூடிய நிலைமை இருந்திருந்தால் நிச்சயமாக இவ்வாறான இனக் குரோதம் கொண்ட பௌத்தமத குருமார்கள் இன்னொரு தடவை உண்ணாவிரதம் இருந்து கூட அவற்றைச் சிதைத்திருப்பார்கள் என்பதையும் மறுக்க முடியாது.
ஏனென்றால் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் வருகின்ற அரசாங்கமானது எப்பொழுதுமே பௌத்தமதத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றதாகவே இருக்கின்றது. அதிலும் பௌத்தமத குருமார்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகள் நியாயமானதா இல்லையா என்பதைக் கூடப் பார்க்காமல் அந்த மதகுருமார்கள் சொல்கின்றதை செவிமடுக்கின்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.
பௌத்த மத குருமார்களின் இந்த அணுகுமுறை அழுத்தத்திற்குப் பணிந்து அரசாங்கம் முடிவெடுத்தல் அல்லது பதவி விலகுதல் என்பது இலங்கை அரசியலுக்கு பாதிப்பானது. குறிப்பாக ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் எங்களுடைய அரசியலுக்கும் இன ஒருமைப்பாட்டிற்கும் பாதிப்பானதாகவே அமையும். ஒரு பொழுதும் பாதுகாப்பானதாக இருக்காது.
இதேவேளை இந்தவிடயம் தமிழ்த் தரப்பில் இருந்து எவ்வாறு நோக்கப்படுகின்றது என்பதுதான் முக்கியமானது. அதாவது இஸ்லாமிய அமைச்சர்களின் பதவிவிலகல் எங்களுக்கும் ஒரு பாடத்தைச் சொல்லித் தந்துள்ளது. அவர்களுக்கிடையில் கட்சி வேறுபாடுகள் முரண்பாடுகள் இருந்தாலும் கூட இஸ்லாமியர்களுக்கான பிரச்சனை என்று வருகின்ற பொழுது அவர்கள் தங்களுக்கிடையிலான கட்சி வேறுபாடுகளை மறந்து அதனைத் தற்காலிகமாக ஒத்திவைத்து ஒன்றாக ஓரணியில் நிற்கின்றார்கள்.
ஆனால் தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் எங்களுக்குள்ளேயே தேசியம் என்கின்ற கோட்பாட்டிற்குள் இருக்கக் கூடிய கட்சிகள் கூட ஒரு பொது வேலைத் திட்டத்தின் கிழ் ஒன்றுபடுவதற்கான வாய்ப்பு அரிதாகவே இருக்கின்றது. இது துரதிஸ்ரவசமானது. இஸ்லாமிய தலைவரகளிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது என்றார்.
-எஸ்.நிதர்ஷன்-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை