சுட்டொிக்கும் வெய்யிலில் விடப்பட்ட 1500 பரீட்சாா்த்திகள்!!📷

பயிலுனா் செயற்றிட்ட உதவியாளா் சேவைக்கு ஆட்சோ்ப்பு செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து அலாி மாளிகைக்கு நோ்முக தோ்வுக்கு அழைக்கப்பட்ட சுமாா் 1500 பரீட்சாா்த்திகள் சுட்டொிக்கும் வெய்யிலில் வாிசையில் நிறுத்தப்பட்ட சம்பவம் இன்ற நடைபெற்றுள்ளது.


அவர்களுக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படாததால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளளர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பின் கீழ் வரும் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு,

வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சால், பயிலுநர் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு ஆள்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகத் தேர்வில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்று அழைக்கப்பட்டனர். இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கான

நேர்முகத் தேர்வு பிரதமரின் அலுவலகமான அலரிமாளிகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு என்று நேர்முகத் தேர்வு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமைய பரீட்சாத்திகள் முற்பகல் 11 மணிக்கே அலரிமாளிகைக்குச் சென்றிருந்தனர்.

சுமார் ஆயிரத்து 500 பேர் வரை வீதியில் சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.தமக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட எந்த வசதிகளும் செய்து தரப்படவில்லை பரீட்சாத்திகள் தெரிவிக்கின்றனர். நேர்முகத் தேர்வுக் கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த பிற்பகல் ஒரு மணிக்கு நேர்முகத் தேர்வு ஆரம்பிக்கப்படவில்லை.

அதனால் பரீட்சாத்திகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.