சுவிஸில் மர்மமாக உயிரிழந்தவர் தொடர்பில் யாழில் மனைவி சந்தேக தகவல்!!

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.

தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என, யாழ்ப்பாணத்திலுள்ள அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

நவசீலன் சபானந்தனின் சடலம் கடந்த 18ஆம் திகதி நீர்த்தேக்கம் ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் சுவிட்சர்லாந்தின் அரோ பிரதேசத்தில் அறை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதியில் இருந்து நவசீலன் அறைக்கு வரவில்லை எனவும் அவரது கையடக்க தொலைபேசி செயலழிந்துள்ளதாகவும், அவரது நண்பர்கள் சுவிஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் கடந்த 18ம் திகதி அவரை சடலமாக மீட்டனர்.

இந்நிலையில் தனது கணவனின் மரணம் தொடர்பில் யாழ்ப்பாண ஊடகவியலாளர்களிடம் மனைவி கருத்து வெளியிட்டார்.

தனது கணவனுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. மரணத்தில் சந்தேகம் உள்ளது. இது குறித்து சுவிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

எனினும் இந்த மரணம் குறித்து சுவிஸ் அதிகாரிகள் எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

உயிரிழந்தவரின் சடலம் அவர் சேவை செய்யும் நிறுவனத்தின் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அந்த சடலத்துடன் மரண சான்றிதழ் ஒன்றையும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.