புத்தர் சிலைக்கு பாதுகாப்பில் இராணுவம்!!

கொழும்பு - கண்டி வீதியின் பஸ்யால நகரில், புத்தர் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளது, இது வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   


பஸ்யால நகரத்தில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் இருந்த புத்தர் நிலை உடைக்கப்பட்டு வீதியில் போடப்பட்டிருந்தது. அதனை பிரதேச மக்கள் தூக்கி வைத்துள்ளனர். செருப்பு ஒன்றும் சிலைக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளது. அத்துடன் கண்காணிப்பு கமரா கட்டமைப்பின் வயர்களும் அகற்றப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து, நிட்டம்புவ பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய பொலிசார் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.கைவிரல் அடையாளத்தை பரிசோதிப்பதற்காக நிபுணர்கள் அழைத்து வரப்படவுள்ளனர். அங்கு இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இந்த சம்பவம் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.