இன்று அவுஸ்ரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்!!


உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் தொடரில் அவுஸ்ரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.


உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான இன்று (புதன்கிழமை) டவுன்டானில் நடைபெறும் 17-வது தொடர் போட்டியில் நடப்பு சாம்பியன் அவுஸ்ரேலியா அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அவுஸ்ரேலியா அணி தனது முதலாவது தொடர் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 2-வது போட்டியில் 15 ஒட்டம் வித்தியாசத்தில் மேற்கிந்தியதீவை தோற்கடித்தது. 3-வது தொடர் போட்டியில் 36 ஒட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.

இந்தியாவுக்கு எதிரான தொடர் போட்டியில் அவுஸ்ரேலியா அணியின் துடுப்பாட்டக்காரர்கள் சற்று தடுமாற்றத்தை சந்தித்தனர். வழக்கமான அந்த அணியின் அதிரடி போட்டியை காண முடியவில்லை. முந்தைய போட்டியில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு வர 5 முறை சாம்பியனான அவுஸ்ரேலியா அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும்.

பாகிஸ்தான் அணி தனது முதல் தொடர் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியதீவிடம் தோல்வியை சந்தித்தது. அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 14 ஒட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இலங்கைக்கு எதிரான முந்தைய தொடர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

அவுஸ்ரேலியா : டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஸ்டீவன் சுமித், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் அல்லது ஜாசன் பெரேன்டோர்ப்.

பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), ஆசிப் அலி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ், ஹசன் அலி, ஷதப் கான், முகமது அமிர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo
Powered by Blogger.