டொல்பின், திமிங்கலம் வளர்க்க தடை!!

டொல்பின், திமிங்கலம் ஆகியவற்றை வளர்க்க தடை விதித்து கனடாவில் புதிய சட்டம் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக ‘ப்ரி வில்லி’ என்ற புதிய சட்டம் குறித்த மனு கனடா நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சட்டத்தின்படி தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் எவரும் திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்களை பிடிப்பதற்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது.

குறித்த இந்த புதிய சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை மீறுபவர்கள் இந்திய மதிப்பில் ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.