காணாமல் போன விமானம்: களத்தில் இஸ்ரோ!
இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன் 32 விமானம் காணாமல்போன நிலையில், அதனைத் தேடும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.
(ஜூன் 3.06.2019) மதியம் 12.25 மணியளவில் அசாம் மாநிலம் ஜோர்காத் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது ஆண்டனோவ் ஏஎன்32 ரக விமானம். இதில் 8 விமானப்படை ஊழியர்கள் உட்பட 13 பேர் பயணித்தனர். அருணாச்சலப் பிரதேச மாநிலம் மெசுகாவில் உள்ள ராணுவ முகாம் நோக்கிச் சென்ற இந்த விமானம் சுமார் அரை மணி நேரத்தில் ராடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. இதையடுத்து, விபத்து ஏதாவது நடந்ததா என்ற கோணத்தில் விமானப்படை தேடுதலைத் தொடங்கியது.
மெசுகா ராணுவ முகாம் சீனாவின் எல்லை அருகே அமைந்துள்ளது. இதன் விமான ஓடுபாதையானது ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சிரமமானது. அது மட்டுமல்லாமல், நேற்று அப்பகுதியில் மோசமான வானிலை நிலவியதாகக் கூறப்படுகிறது. இதனால், காணாமல்போன ஏஎன் 32 விமானத்தைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் (இஸ்ரோ). அது மட்டுமல்லாமல், இந்திய விமானப்படையுடன் இணைந்து கடற்படையும் இந்த தேடுதலில் ஈடுபட்டுள்ளது. சென்னை அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளியைச் சேர்ந்த பி8ஐ ரக விமானமொன்று தற்போது இந்த தேடுதலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை