யாழ் மாவட்டத்தில் மேலதிக கொள்ளையடிக்க துாித அபிவிருத்தி!!

வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக யாழ்.மாவட்டத்தில் சுமாா் 5500 மில்லியன் ரூபாய் செலவில் துாித அபிவிருத்தி வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளா் வே.சிவஞானசோதி கூறியுள்ளாா்.


யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய கட்டத்துக்கான அடிக்கல் யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி, கல்லுண்டாய் மூன்று கோவில் பகுதியில் இன்று நடப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கட்டடத்துக்கான அடிக்கல்லை நட்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் அவா் தெரிவித்ததாவது,

தேசிய இளைஞர்கள் மன்றதுக்காக அமைக்கப்படும் இந்தக் கட்டடத்துக்கு பிரதமரின் கீழான தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள்

அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டடம் 50 மில்லியன் ரூபா செலவில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தின் ஊடாக மாவட்டத்தின் இளைஞர்களின் ஆளுமை – திறன்களை

விருத்திசெய்வதற்கான பயிற்சி நிலையங்களைக் கொண்டதாக அமைகின்றது. இளைஞர்களுக்கான பயிற்சி நிலையம், இளையோர் தங்குவதற்கான தங்குமிட வசதிகள், உள்ளக விளையாட்டு அரங்கம்,

விளையாட்டு மைதானம், அலுவலகக் கட்டம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் இளைஞர் சேவைகள் மன்றம் இந்தப் பிரதேசத்தில் இயங்கவுள்ளது.

இந்தப் பயிற்சி நிலையத்தில் ஊடாக தகவல் தொழில்நுட்பம், தையல் பயிற்சி, அழகியற்கலை, அலைபேசி திருத்தம், ஜிம், கராத்தே உள்ளிட்ட உடற்பயிற்சிகள் போன்ற பல்வேறு வகையான பயிற்சிகள் இளையோருக்கு வழங்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்திலே 11 ஆயிரத்து 450 இளையோர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், வடக்கு அபிவிருத்தி,

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் ஊடாக சுமார் 5 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன் மிகவும் உற்சாகமாக ஈடுபட்டுள்ளார். எனவே இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் இந்த வருடத்துக்குள் நிறைவு செய்யப்படவேண்டும் என்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.