அமெரிக்காவில் மேற்கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்த விமானம்!!

அமெரிக்காவின் கனெக்டிக் மாகாணத்தில் உள்ள டைன்பரி நகரில் பேட்டரியில் இயங்கும் கிளைடர் ரக குட்டி விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.



நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் பேட்டரியின் மின்சக்தி திடீரென தீர்ந்தது. இதனால் விமானத்தை அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சி செய்தார்.

ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த வீடு ஒன்றின் மேற்கூரை மீது மோதியது. இதில் வீட்டின் மேற்கூரை உடைந்து விமானத்தின் முக்கால்வாசி பகுதி வீட்டுக்குள் விழுந்தது.


இதில் விமானிக்கும், வீட்டு உரிமையாளரான பெண் மற்றும் அவரது 2 மகள்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. விமானம் வேகமாக வந்து மோதியதில் குண்டு வெடித்தது போல பலத்த சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

பின்னர் அவர்கள் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வீட்டுக்குள் விழுந்த கிளைடர் விமானத்தை கிரேன் மூலம் மீட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.