லசந்த, தாஜுதீன் உள்ளிட்ட 04 குற்றங்களுக்கு எதிரான விசாரணைகளை நிறைவு செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவு!!

லசந்த விக்ரமதுங்க மற்றம் வசீம் தாஜுதீன் ஆகியோரின் கொலை உள்ளிட்ட நான்கு முக்கிய குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை உடனடியாக வழங்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரத்னவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் சிலருக்கு எதிராகவும், மூதூரில் அரச சார்பற்ற அமைப்பொன்றின் 17 பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விசாரணை அறிக்கைகளை சட்ட மா அதிபர் கோரியுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபருக்கு மேலதிகமாக, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் அதன் பணிப்பாளர் ஆகியோருக்கும் சட்ட மா அதிபர் கடிதங்களை அனுப்பியுள்ளார்

இந்த சம்பவங்கள் குறித்த விசாரணைகளில் அதிக தாமதம் ஏற்பட்டிருப்பதாக சட்ட மா அதிபர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.   #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.