முருகனை பற்றி பலரும் அறியாத பல அற்புத ரகசியங்கள்!!

சித்தர்களுக்கெல்லாம் சித்தன் என்று கருதப்படும் இவர், பல்லாயிரம் ஆண்டுகள் இளமையோடு வாழ்வதற்கான யுக்தியை அறிந்து கிட்டதட்ட 4000 ஆண்டுகள் அழகான குமாரனாக பூதஉடலுடன் இந்த பூமியில் வாழ்ந்துகாட்டியவர். அதனாலேயே இவருக்கு குமரன் என்றொரு பெயரும் உண்டு.


தமிழ் மொழியை வடிவமைத்த கடவுள் இவரே. அதனாலேயே இவரை தமிழ் கடவுள் என்று அழைக்கிறோம்.

’சரம்’ என்றால் மூச்சு என்று பொருள். ’சரத்தை வயப்படுத்தினால் காலத்தை வெல்லலாம்; காலனையும் வெல்லலாம்; கடவுளையும் காணலாம்’ என்பது இவரது தத்துவம். சரத்தை வணப்படுத்திக் கட்டியதாலே இவருக்கு ‘சரவணன்’ என்ற சிறப்பு பெயர் வந்தது.

சிவனின் நெற்றி கண்ணில் இருந்து வெளிப்பட்ட பொறிகள் பொய்கை நதியில் பட்டதும் அவை ஆறு குழந்தைகளாக மாற. அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்து வர. பின் ஒருநாள் அந்த ஆறு குழந்தைகளுக்கும் தாயான பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கையில், பன்னிரு கரங்களோடும் ஆறு முகத்தோடும் முருகன் தோன்றினார் என்கிறது கந்த புராணம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாச்சாரம். அனால் அந்த மொழியின் கடவுளுக்கோ இரண்டு மனைவிகள் என்று சிலர் கேலி செய்வதுண்டு. அனால் உண்மையில் முருகனுக்கு இரண்டு மனைவிகள் உண்டா என்றால் இல்லை. இதை அறிய சற்று நுணுக்கமாக ஆராய வேண்டும்.

ஒரு மனிதனின் தலையில் இருந்து கால்வரை உள்ள ஒற்றை உறுப்புக்கள் இவையே.

1.நெற்றி (பிரம்மந்திரா)

2.தொண்டைக் குழி (ஆங்ஞை)

3.மார்புக்குழி (விசுத்தி)

4.தொப்புள் குழி (மணிப்பூரம்)

5.ஆண் /பெண் குறி (சுவாதீஸ்டன்)

6.மலக்குழிக்கு மேல் (மூலாதாரம்)


இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இனைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த நேர்கோட்டிற்கு இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களை இயங்கச்செய்வது சுழுமுனையே.

இந்த சுழுமுனையே முருகன். இதற்கு இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம். எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை.

Powered by Blogger.