யாழ்.மாநகர சபையின் அசமந்த போக்குகள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பிரேரணை!!

யாழ்.மாநகர சபையின் அசமந்த போக்குகள் தொடர்பாக கடந்த 07.06.2019 அன்று என்னால் சமர்ப்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு பிரேரணை

இது யார் மீதும் குற்றம் சுமந்த வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட பிரேரணை அல்ல. ஆனால் இவ் அலட்சியப்போக்குகளுக்கு காரணமானவர்கள், தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொண்டு எதிர் காலத்தில் அலட்சியம் இன்றி வினைத்திறனுடன் விரைவாகச் சேவையாற்ற வேண்டும் என்பதற்காகவும் கீழ் வரும் விடயங்கள் தொடர்பில் பொறுப்பும் கூறவேண்டும்

1. பிராதன வீதியில் காணப்பட்ட பழக் கடை அகற்றல் தொடர்பானது.

யாழ்.பிரதான் வீதியில் பஸ்ரியன் சந்திக்கு அருகாமையில் உள்ள பழக்கடை தொடர்பில் அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்து அதனை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பில் உறுப்பினர் மயூரன் மற்றும் செஜயசீலன் ஆகியோர் அக் பழக்கடைக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் யாழ்.மாநகர சபையின் அனுமதி பெறாத அக் கடையை அகற்றுவது தொடர்பாக யாழ்.மாநகர சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதன் யாழ்.மாநகர சபையினர் அக் கடையினை அகற்றும் முகமாக சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட அக் கடையில் இருந்த பழங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். ஆனால் அடுத்த நாள் மீண்டும் அக் கடை திறக்கப்பட்டு இன்று வரை நடைபெற்று வருகின்றது.

ஒரு கடையின் வியாபார பொருளாகிய பழங்கள்கள் பறிமுதல் செய்யப்பட்டால் குறித்த வியாபாரி எவ்வளவு பெரிய நடத்தினை அடைவான். அவன் தனது பொருட்களைப் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு யாழ்.மாநகர சபைக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு நடக்காமல் அடுத்த நாளே அதே இடத்தில் புது பழங்களைக் கொண்டு அக் கடை திறக்கப்பட்டு இன்று வரை நடை பெறுகின்றது என்றால் அப் பழக்கடையின் பின்னால் உள்ள சுட்சமம் என்ன?

 ஒரு தடைவ பழங்கள் பறிக்கப்பட்டவுடன் யாழ்மாநகர சபையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன. ஆக மக்கள் விரும்பதா சட்டத்திற்கு புரம்பான ஒரு பழக்கடையை கூட அகற்ற எம்மால் முடியவில்லை?

2. கழிவு நீர் வீதியில் திறந்து விடுதல் தொடர்பானது...

ஐந்து சந்தியில் உள்ள ஒரு குடி நீர் விற்பனை நிலையம். அதன் பெயர் முஜீபா. அங்கு தினமும் பல ஆயிரம் லீற்றர் நீர் எடுக்கப்படுகின்றது. நிலத்தடி நீர் தொடர்பான இவ் பாரதூரமான பிரச்சனை யாழ்.மாநகர சபையின் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்ற காரணத்தினால் அதை விடுத்து யாழ்.மாநகர சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரச்சனைக்கு செல்வோம்.


குடி நீர் விநியோகம் செய்கின்ற குறித்த நிறுவனம் யாழ்.மாநகர சபையில் எந்த வியாபர அனுமதியும் பெறவில்லை அத்துடன் குடி நீரில் இருந்து பிரித்தொடுக்கப்படுகின்ற கழிவு நீர் பல குடிமனைகள் மிக நெருக்கமாக உள்ள வீதியில் தினமும் திறந்து விடப்படுகின்றது. அதனால் குறித்த பகுதி வெள்ளம் நிறைந்தாக காணப்படுகின்றது.

இச் சம்பவம் அறிந்து நானும் சக உறுப்பினர் தனுஜனும் அப் பகுதி  பி.எச்.ஐ அதிகாரியுடன் சென்றோம் அப்போது கடை உரிமையாளருடன் கதைத்த பி.எச்.ஐ அதிகாரி எனிமேல் கழிவு நீர் வெளியில் விட மாட்டாகள் என்ற உறுதி மொழியை எமக்கு தந்தார் அடுத்த சில நாட்களின் நடைபெற சுகாதார குழுக் கூட்டத்திலும் மேற்படி பி.எச்.ஐ அதிகாரியை வினாவிய போது அது நிறுத்தப்பட்டு விட்டது என்று கூறினார்.


ஆனால் அது இன்று வரை தொடர்கின்றது. குறித்த வியாபார நிலையத்தின் கழிவுநீர் வீதிகளில் திறந்து விடப்படுகின்றுது. இது யாழ்.மாநகர சபையின் அலட்சியப்போக்கினையே காட்டுகின்றது.

3. கஸ்தூரியார் வீதி வெள்ளவாய்க்கா லுக்குள் அசிட் திரவத்தை சேர்த்தல் தொடர்பானது

மே மாதம் 12 ஆம் திகதி யாழ்.மாநகர சபை ஊழியர்கள் கஸ்தூரியா வீதியில் உள்ள ஒரு வெள்ளவாய்க்காலுக்குள் இறங்கி சுத்தம் செய்தார்கள். அந்த வெள்ளவாய்க்காலுக்குள் அயலில் நகை சுத்தம் செய்யும் இடத்தில் இருந்து 68 வீத செறிவுள்ள அசிட் திரவம் விடப்படுகின்றது.

அந்த அசிட் கலந்த வெள்ளவாய்க்காலுக்கு எந்த வித பாதுகாப்பும் இன்றி இறங்கி தான் எமது மாநகர சபை ஊழியர்கள் அதனை சுத்தம் செய்தார்கள். இது தொடர்பில் வட்டார உறுப்பினர் அருள் குமரன் அவர்கள் அறிவித்தன் படி உறுப்பினர்கள் ஆனா லோகதயாளன், தனுஜன் மற்றும் மயூரன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன்.

அங்கு காணப்பட்ட பல பிரச்சனைகள் தொடர்பாக முதல்வர் மற்றும் தொலைபேசியில் உரையாடப்பட்டது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

வெள்ளவாய்கா லுக்கும் செலுத்தப்படும் அசிட்திரவம் நிறுத்தப்படும், வீதியின் அரைவாசியில் கட்டப்பட்டுள்ள கடை படிக்கட்டுக்கள் உடைக்கப்படும் அதன் மூலம் அவ் வீதியில் குடியிருக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுக் கழிவுகளினை ஏற்றுவதற்கு டக்ரர் உள்ளே இலகுவாக செல்வதற்கு வழிசமைக்கப்படும் என்று உறுதியழிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை எதுவும் செய்யப்பட்ட வில்லை.  அக அனைத்து செயற்பாடுகளும் சொற்களால் வெறும் உறுதி மொழிகளால் மட்டுமோ காணப்படுகின்றன.

4. கஸ்த}ரியார் வீதியில் மக்களின் பாவனையில் உள்ள பொது கிணறுக்கு மூடியிடுதல் தொடர்பானது

யாழ்.இந்துக் கல்லூரிக்கு முன்னாக உள்ள பல மக்களின் பாவனையில் உள்ள பொதுக்கிணறு. ஆந்த பொதுக் கிணறுக்கு மூடியிடுமாறு அதன் வட்டார உறுப்பினர் தனுஜனால் 2018 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கைக்கான கடிதம் காணாமல் போய் விட்டது இவ்வாறு 4 தடவை விடப்பட்ட கோரிக்கை கடிதம் மீண்டும் மீண்டும் காணமல் போய்விட்டது.

 பொறுமையிழந்த உறுப்பினர் நேரடியாக அலுவலகம் சென்று முறையிட்டு இனி இந்த விடயத்தை சபையில் பார்த்துக் கொள்ளுகின்றேன் என்று கூறியதன் அடிப்படையில் 5 நாட்கள் கழித்து அக் கிணறு   அன்று முடியிடப்பட்டது. அக 22 000 பெறுமதியான இவ் மூடியினை போடுவதற்கு 12 மாதங்கள் மட்டுமல்ல 5 தடவை கோரிக்கை கடிதமும் வழங்கவேண்டியுள்ளது. இது யாழ்.மாநகர சபையின் அசமந்த போக்கினை வெளிப்படுத்தி நிற்கின்றது

5. அம்மன் வீதியில் இரு பக்கமும் கல்லிடுதல் தொடர்பானது..

டிசம்பர் மாதம் இக் கோரிக்கை கடிதம் கௌரவ முதல்வர் அவர்களிடம் என்னால் வழங்கப்பட்டது அன்றே அதற்கு கௌரவ முதல்வர் அவர்கள அனுமதி வழங்கி  சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு வழங்கப்பட்டது. கடந்த மாத நடுப்பகுதியில் அவ் வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த தொடங்கினார்கள்.

 யாழ்.மாநகர சபை ஊழியர்கள் சிலர் தொடர்ந்து 4 நாட்கள்  வீதியின் இருமருங்கிலும் உள்ள புற்றகளை வெட்டி சுத்தம் செய்தார்கள் பின்னர் காணமல் போய்விட்டார்கள். அத்துடன் அவ் வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. அவர்கள் அப்போது வெட்டிய புற்றகள் இப்போது மறுபடியும் முளைத்து விட்டன. ஆக புற்களை வெட்டுவதற்கு பயன்படுத்திய 4 வேலை நாட்கள் வீண்விரயமானது.

இவ்வாறே அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலைத்திட்டங்கள். நடைபெறுகின்றன. இதே அம்மன் வீதியில் தான் பல மில்லியன் ரூபா காசு செலவில் வீதியின் இரு பக்கங்களிலும் வாய்ககால் கட்டப்பட்டு பின்னர் அது சில நாட்களிலேயே இடிந்து விழ வாய்காலுக்கு இடையில் மரத்தடிகளை இட்டு முண்டு கொடுத்த வரலாறும் உண்டு. ஏறத்தாழ    500 மீற்றர் வாய்க்கால் கட்டுவதற்கு  1 வருடம்   சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. திட்டமிடாமல் செய்யப்படு கின்ற வேலைகளுக்கு இது ஓர் உதாரணம்.


 அங்கு பணிபுரிந்த ஒரு ஊழியரிடம் ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது என்று கேட்டால் அந்த ஊழியர் சர்வசாதாரணமாகச் சொன்னார் மாநகர சபை வேலை என்றால் இப்படி தான் என்று. அது அப்படி தானா என்பதனை யாழ்.மாநகர சபையே கூறவேண்டும்.

6. யாழ்.பஸ் நிலைய மலசல கூட்டம் தொடர்பானது..

யாழ்.பஸ்நிலையத்தில் புதிதாக மறு சீரமைக்கப்பட்ட மலசலகூடங்கள் காலை 4.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை மட்டுமே பாவனையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தூர இடங்களில் இருந்து இரவு நேரங்களில் வருபவர்கள் மிகுந்த சௌகரியங்களை சந்திக்கின்றனர்.


ஏன் அவ்வாறு இரவு நேரங்களில் திறக்கப்படுவதில்லை என்று கேட்டபோது அவர்கள் கூறிய காரணம் யாழ்.மாநர சபை மலசலகூட கழிவுகளை உரிய முறையில் உரிய நேரத்தில் அகற்றுவதற்கு முன்வராமையே என்றும் தாங்கள் கழிவுகளை அகற்றுவதற்கு அதிக கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கின்ற போதிலும் மாநகர சபை அதனை உரிய நேரத்தில் செயற்படுத்துவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


ஆக மக்களின் விமர்சனம் யாழ்.மாநகர சபை மீதே திரும்பியுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும அத்துடன் இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

7. கணக்காளர் பகுதியின் கவனயீனம்

கடந்த ஜனவரி மாதம் 1470 லீற்றர் டீசல் நிரப்பட்டதற்குரிய சிட்டை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் கணக்காளருக்கு அனுப்பப்ட்டது. அதில் குறித்த எரிபொருள் நிறுவனத்தினர் ஒரு தவறு செய்து விட்டார் 1470 லீற்றர் டீசலுக்குரிய பணத்தினை 1470 X 99 என்று பெருக்கி அதன் தொகையினைப் போடுவதற்கு பதிலாக 147 X 99 என்று பெருக்கி போட்டு விட்டார்கள்.

யாழ்.மாநகர சபையும் குறித்த தொகைக்குரிய காசோலையினை எழுதிகொடுத்து விட்டார்கள். இப்போது குறித்த எரிபொருள் நிலையத்தினர் தாம் கணக்கில் பிழை செய்து விட்டோம் எனவே மிகுதிப் பணத்தினை தருமாறு கடிதம் எழுதியுள்ளனர்.

இது செயல் பணரீதியில் மாநகர சபைக்கு இழப்பீடு அல்ல. ஆனால் வருகின்ற சிட்டைகளை சரிபார்க்காமல் அதற்குரிய தொகைளை மட்டுமே கணக்காளர் அலுவலகம் காசோலையா வரைகின்றது என்கின்ற செய்தியை இது வெளிப்படுத்தி நிற்கின்றது இது காணக்காளர் பகுதியின் மிக மிக அலட்சியமாக செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு யாழ்.மாநகர சபை நிர்வாகம் எது கூறப்போகின்றது.?

8. யாழ். மாநகர சபையில் டீசல் பாவனையில் ஏற்பட்ட மாற்றங்கள்

2018 ம் ஆண்டு 10 மாதம் பயன்படுத்தப்பட்ட டீசலின் அளவு-  7590 L

2018 ம் ஆண்டு 11 மாதம் பயன்படுத்தப்பட்ட டீசலின் அளவு-  8648 L

2018 ம் ஆண்டு 12 மாதம் பயன்படுத்தப்பட்ட டீசலின் அளவு-  8169 L

2019 ம் ஆண்டு 1 மாதம்   பயன்படுத்தப்பட்ட டீசலின் அளவு-  9132 L

2019 ம் ஆண்டு 2 மாதம்   பயன்படுத்தப்பட்ட டீசலின் அளவு-  6230 L

2019       ம் ஆண்டு 3 மாதம்      பயன்படுத்தப்பட்ட டீசலின் அளவு-  6343 L

செப்ரம்பர், ஒக்டோபர்,நவம்பர், டிசம்பர் மாதங்களில் பயன்படுத்தப்பட்ட டீசலின் அளவில் பெப்ரவரி, மார்ச் மாதங்களளில் மட்டும் திடீர் என்று இந்த  ஏன் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது  குறித்த மாதங்களில் மட்டும் யாழ்.மாநகர சபையின் செயற்பாடுகள் மந்த கதியில் நடைபெற்றதா?

வெப்ரவரி மாதம் வாகனப்பகுதிக்கு புதிதாக மிகவும் கண்டிப்பான ஒரு தொழிநுட்ப உத்ததியோகத்தர் நியமிக்கப்பட்டார் அவர் கடமை புரிந்த இரண்டு மாதங்களில் மட்டும் இவ் குறைவான டீசல் பயன்படுத்தப்பட்டது பின்னர் வாகனப்பகுதி ஊழியர்கள் அவரை மாற்றுமாறு கூறியதற்கு இணங்க அவர் மார்ச் மாதத்துடன் மாற்றப்பட்டார் . அதன் பிற்பாடு டீசலின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது.

9. சட்டவிரோத சலவை செய்யும் இடம் தொடர்பானது

கே.கே.எஸ் வீதியில் பழைய மில்க்வைற் நிறுவனத்திற்கு அருகில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் லோன்றி ஒன்று இயங்கி வருகின்றது இது தொடர்பில் கடந்த வருட நடுப்பகுதியில் இச் சபையில் முறையிட்டப்பட்ட போதிலும் இது தொடர்பில் யாழ்.மாநகர சபை இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ் லோன்றியின் கழிவு நீர் இன்றும் வீதியில் திறந்து விடப்படுகின்றது.

10. அபகரிக்கப்பட்ட யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான வீதி தொடர்பாக

இவ் வருடம் ஜனவரி மாத பொதுக்கூட்டத்தில் கௌரவ உறுப்பினர் கிருபாகரன் அவர்களால் யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான நிலங்களை மீட்பது தொடர்பாக பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டது. யாழ்மாநகர சபைக்குச் சொந்தமான ஜிம்மா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஒரு வீதி அத்திப்பட்டி கிராமம் போல் காணாமல் போய்யுள்ளது.


யாழ் மாநகர சபை வீதிகள் பதிவேட்டில் காணப்படும் குறித்த வீதி தற்போது ரொப்பாஸ் வியாபார நிறுவனத்தினால் அபகிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான குறித்த வீதியியை மீட்பது தொடர்பில் யாழ்.மாநகர சபை என்ன நடவடிக்கை எடுத்தது? இல்லா விட்டால் குறித்த வீதியை யாழ்.மாநகர சபை குறித்த நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டு விட்டதா?

பொதுச் சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றகரமாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது தொடர்பிலானது


11. 25.06.2018 அன்று யாழ்.மாநகர சபையின் மூன்றாவது பொதுக்கூட்டத்தில் உறுப்பினர் மணிவண்ணன் அவர்களால் சங்கிலியன் பூங்காவின் பெயரினை கிட்டுப்பூங்கா என் பெயர்மாற்றம் செய்வது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

இப்பிரேணையை கௌரவ உறுப்பினர்  அருள்குமரன் முன்மொழிய கௌரவ உறுப்பினர் ஜெயசீலன் அவர்கள் வழி மொழிய சபை ஏக மனதாக ஏற்றுக் கொண்டது. இன்றில் இருந்து ஒரு வருடத்திற்கு முன் இச் சபை ஏகமனதாக ஏற்றுககொண்ட இப் பிரேரணை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் என்ன?

12. அதே சபையில் சட்டவிரோதமாக ஒட்டப்படும் சுவரொட்டிகளை தடை செய்யவேண்டும் என்று ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு அதுவும் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் இவ் வருடம் மார்ச் மாதம் 18 ஆம் திகதி கௌரவ முதல்வர் அவர்கள் யாழ்.மாநர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடுகள் மற்றும் கட்டிடங்களின் மேல சுவரொட்டிகளை ஒட்டுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று என்று அறிவித்தார்.

வெறும் அறிவிப்போடு மட்டும் இச் செயற்பாடு முடிவுறுத்தப்பட்டதா அல்லது அறிவிக்கப்பட்டு 4 மாதகாலம் முடிவுற்ற நிலையில் எத்தனை பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெளிவுபடுத் தப்படவேண்டும்.

13. 20.08.2018 அன்று நடைபெற்ற ஐந்தாவது மாதாந்த பொது கூட்டத்தில் கௌரவ உறுப்பினர் தர்சனாந் அவர்கள் நோய்வாய்ப்பட்ட தொழிலிளார்கள் 38 பேரும் ஆழா இடம் மருத்துவ பரிசோனை பெற வேண்டும் என்று கூறப்பட்டது 38 பேரில் எத்தனை பேர் மருத்துவ பரிசோனை பெற்றார்கள் என்று கேட்ட போது அப்போது இருந்த அழா  அதிகாரி 10 க்கு குறைவானவர்களே வந்தார்கள் என்று கூறியிருந்தார் அக இன்று 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில் மிகுதியானவர்களின் மருத்துவ பரிசோதனை தொடர்பாக நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன?


14. 20.8.2018 அன்று நடைபெற்ற ஐந்தாவது மாதாந்த பொது கூட்டத்தில் வட மாகாணகல்வி அமைச்சின் நியமங்களை மீறி பாடசாலை மாணவர்களுக்கு சிகை அலங்கரிப்பு செய்யும் யாழ்.மாநர சபைக்குட்பட்ட சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கான கட்டுப்பாடு விதித்தல் தொடர்பான பிரேரணை என்னால் சமர்ப்பிக்கப்பட்டு கௌரவ உறுப்பினர் லோகதயாளன் அவர்கள் வழிமொழிய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.


இது தொடர்பில் அப்போது கருத்து தெரிவித்த முதல்வர் வட மாகாணசபை சிறந்த சுற்று நிருபம் ஒன்றை கொண்டு வந்துள்ளது இது தொடர்பில் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு கடிதம் அனுப்பப்படும் மீறும் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.


எனவே இது தொடர்பில் சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கு இப் பிரேரணை தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டதா எப்போது அனுப்பபட்டது? அனுப்பப்பட்டதாயின் அதன் பிரதியை சமர்ப்பிக்க முடியுமா?


15. 20.8.2018 அன்று நடைபெற்ற ஐந்தாவது மாதாந்த பொது கூட்டத்தில்  யாழ்.ஆனைப்பந்தி சந்தியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் அவற்றினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி அவர்கள் குறிப்பிட்டார்.


அதற்கு பதில் அளித்த கௌரவ முதல்வர் கனரக வாகனங்கள் வீதியில் நிறுத்தி வைக்க முடியாது. எனவே இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு வீதி அபிவிருத்தி சபைக்கு அறிவிக்குமாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டதா? ஏன்என்றால் 10 மாதங்கள் கடந்த பிற்பாடும் இன்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

16. 25.10.2018 அன்று நடைபெற்ற ஏழாவது மாதாந்த பொது கூட்டத்தில்  கௌரவ உறுப்பினர் ஜெந்தினி கோம்பையன் மணல் மயானத்தில் 2 லைற் பொருத்தும்படி கூறினார். ஏன்னுடைய ஒரு துயரமான சம்பவத்தின் அடிப்படையில் அதனை அனுபவித்தவன் என்ற ரீதியிலும் கோம்பையன் மணல் மயானத்தில் இரவு நேர இறுதிக் கரியைகளை செய்பவர்களின் வசதிக்காக ஒளிச் செறிவு கூடிய  விளக்குள் இரண்டை பொருத்துமாறு கோரியிருந்தேன் சபையும் ஆழ்ந்த அனுதாபங்களுடன் ஏற்றுக் கொண்டது.

நானும் அது செயல் முறைக்கு வந்திருக்கும் என்றே நினைத்தேன். ஆனால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இரவு நேரம் மேற்படி மயானத்திற்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது அப்போது அந்த விளக்குகள் இன்னமும் பொருத்தப்படவில்லை என்ற உண்மையையும் அறிந்து கொண்டேன்.


தங்கள் உறவுகளை இழந்தவர்கள் இரவு நேரத்தில் இறுதிகிரிகைகளை செய்வதற்கு கூட ஒளிச் செறிவு கூடிய விளக்குகளை பொருத்துவதில் கூட அசமந்த போக்கு தொடர்கின்றது. அதை கூட விரைவாக செய்ய முடியாத நாங்கள் எவ்வாறு இவ் மாநகரத்தை முன்னேற்றப்போகின்றோம்?


17. 25.10.2018 அன்று நடைபெற்ற ஏழாவது மாதாந்த பொது கூட்டத்தில்  கௌரவ உறுப்பினர் செல்வவடிவேல் சேர் அவர்களால் யாழ்.நகர போக்குவரத்து நடைமுறை மற்றும் ஒரு வழிப்பாதை ஒழுங்கு பற்றி பிரேணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார் பல உறுப்பினர்களின் கருத்துக்களுடன் அப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.


அது தொடர்பில் பொலிசாருடன் கதைத்து தான் நடைமுறைப் படுத்தலாம் என்று கூறி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. எனவே இன்று 8 மாதங்கள் கடந்த நிலையில் இது தொடர்பில் எடுத்த நடவடிக்கை என்ன? பொலிசாருடன் கதைக்கப்பட்டதா?


18. இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நவீன சந்தை திருத்திற்காக

 20 மில்லியன் ரூபா இரண்டு காரணங்களுக்காக ஒதுக்கப்பட்டது

1. நவீன சந்தையில் உள்ள மின் இணைப்புக்கள் மீள் சீரமைக்கப்பட்டு அதில் உள்ள அனைத்து கடைகளினதும் மின் மானிகள் ஒரு பொதுவான இடத்திற்கு கொண்டு வருதல்

2. கஸ்தூரியார் வீதியில் உள்ள இரண்டு பாலங்கள் உடைக்கப்பட்டு  திரும்பவும் அமைத்தல்

ஆனால் எந்த ஒரு செயற்பாடும் இது வரை முன்னெடுக்கப்பட்டாதாக தெரியவில்லை. ஆக நவீன சந்தை திருத்தத்திற்காக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா பணத்தினை கொண்டு எச் செயற் பாட்டினை நடைமுறைப்படுத்த போகின்றீர்கள்


19. கஸ்தூரியார் வீதியும் அரசடி வீதியும் இணைக்கும் சந்தியில் கடந்த பல வருடங்களாக பெருமளிவில் வெள்ளம் தேங்கி உள்ளது  இது தொடர்பில் உறுப்பினர் தனுஜன் பல முறை முறையிட்டும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் கடந்த ஒரு வருடமாக நடைபெற வில்லை. மூன்று மிக முக்கிய மான பாடசாலை மாணவர்கள் சென்று வருகின்ற இப்பகுதியில் காணப்படுகின்ற இப் பாரிய பிரச்சனை தொடர்பில் ஏன் யாழ்.மாநகர சபை பாரமுகம் காட்டுகின்றது.


20.  கடந்த 25.5.2019 அன்று யாழ்.மாநகர சபை உள்ளுராட்சி ஆணையாளருக்கு இரண்டு முக்கிய கடிதங்கள் எழுதியிருந்தது அந்த முக்கிய இரண்டு கடிதங்களும் கிட்டு பூங்கா வீதியில் இருந்து எடுக்கப்பட்டது இது யாழ்.மாநகர சபையின் மிகவும் கண்டிக்கத்தக்க அசமந்த போக்கு ஆகும். அத்துடன் அக் கடிதத்தின் ஒரு இடத்தில் ' இவ் நிதிக்குழு கூட்ட அறிக்கையானது 28.8.2019 அன்று நடந்த பொதுச் சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது' என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.


இது எவ்வாறு சாத்தியமானது? மிகவும் ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரிக்கு பொறுப்பு மிக்க யாழ்.மாநகரசபையால் அனுப்பபட வேண்டிய கடிதம் வீதியில் கிடைந்தது மட்டுமின்றி  ஒரு நகைப்புக்குரிய தகவலையும் குறிப்பிட்டு எழுதியது யாழ்.மாநகர சபையின் மிக மோசமான அலட்சியப் போக்கினையே காட்டி நிற்கின்றது.

இவ்வாறான அலட்சியபோக்குகள்  வினைத்திறன் அற்ற செயற்பாடுகள் மற்றும் மெத்தனப் போக்குகள் என்பன மக்கள் எம்மீது கொண்டுள்ள அவ நம்பிகையீனத்தை மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ் அலட்சியப்போக்குகளையும் மறப்போம் மன்னிப்போம் என்ற கோட்பாடுக்குள் சேர்க்காமல் மக்கள் மனமறிந்து மக்களுக்கான சேவையை வினைத்திறன் உடனும் விரும்பத்துடனும் பணி செய்ய வேண்டும்

நன்றி

வரதராஜன் பார்த்திபன்
உறுப்பினர், யாழ்.மாநகர சபை
தமிழ்த்தேசிய மக்கள் முன்ணனி

Powered by Blogger.