சென்னையில் பெய்த மழையால் துளியளவாவது தண்ணீர் பிரச்சனை தீர்ந்ததா?

சென்னையில் நீங்கள் குடியிருக்கும் பகுதியை பாருங்கள் உங்கள் வீட்டை சுற்றி சிறிதளவாது மண் தரை இருக்கிறதா? உங்களில் நூற்றுக்கு 95 பேரின் பதில் இல்லை என்று தான் இருக்கும்..
நீர் பூமியில் இறங்க எங்குமே இடம் இல்லை, வீட்டை சுற்றி சிமெண்ட்டால் மூடப்பட்டுள்ளது, சாலைகள் முழுதும் தார் சாலைகளால் மூடப்பட்டுள்ளது..
பெய்த மழை அனைத்தும் சாக்கடைக்கே சென்றது.. பின் எப்படி தண்ணீர் பிரச்சனை தீரும்.

இந்த பிரச்னையை எப்படி தான் தீர்ப்பது?
அரசால் மட்டும் இந்த பிரச்னையை தீர்க்க முடியுமா? இந்த பிரச்னையை தீர்க்க நமது பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?
ஒவ்வொரு தனி நபரும் தங்கள் வீட்டில் பெய்யும் மழை நீர் பூமிக்கு செல்வது போல் மழை நீர் சேகரிப்பை தாமாக முன்வந்து செய்ய வேண்டும். வீட்டை சுற்றி சிறிதளவாது மண் தரை விட்டு வீடு கட்ட வேண்டும்..
அரசு என்ன செய்ய வேண்டும்?

சாலைகளின் வழியே வழிந்தோடும் நீர் சாக்கடையில் கலக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையின் இரு புறத்திலும் மழை நீருக்கான வாய்க்கால் வெட்டப்பட்டு அந்த மழை நீர் சென்று சேரும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் ஆழமாக சிமென்ட் உரைகள் இறக்கப்பட்டு பெய்யும் மழைநீர் அந்த உரைகளின் வழியாக பூமியில் இறங்கும்படி செய்ய வேண்டும். இந்த உரை கிணறுகள் ஒவ்வொரு பருவ மழைக்கும் முன்பு அரசு பணியாளர்களால் மண் அள்ளப்பட்டு மழை நீர் தடையின்றி நீர் சேரும்படி பராமரிக்க வேண்டும்.
ஏரி குளங்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், எரி குளங்கள் முறையாக தூர் வாரப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.
மேலும் இயற்கைக்கு எதிரான நதிகள் இணைப்பு திட்டங்களை கைவிட்டு அதற்கு பதில் ஆறுகளின் குறுக்கே அங்காங்கே சிறியளவிலான தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும்.

ஆறுகளில் வெல்லம் போகும்போது அந்த நீர் மின் மோட்டார்களின் மூலமாக பெரிய ஏரிகளில் சேகரிக்கப்பட்டு அந்த ஏரிகளில் இருந்து அருகிலிருக்கும் குளங்கள் நிரப்பப்பட வேண்டும் இதன் மூலம் நிலத்தடி நீர் பெருகும். இந்த திட்டத்தை செயல்படுத்த தனி வாரியம் அமைக்க வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவது நதிநீர் இணைப்பை செய்வதற்கு ஆகும் செலவில் 10 சதவிகிதம் கூட ஆகாது. நதிநீர் இணைப்பை விட 100 மடங்கு அதிக பலனை கொடுக்கும்.
இதுவே இன்றைய தமிழ் நாட்டின் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதர்க்கான ஒரே வழியாகும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.