பங்களாவும் பறிபோனது: விரக்தியில் காங்., தலைவர் ராகுல்!

எம்.பி.,க்களுக்கு ஒதுக்குவதற்காக, காலியாக உள்ள பங்களாக்களின் பட்டியலை பார்லிமென்ட் செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் பல ஆண்டுகளாக வசித்து வரும், அரசு பங்களாவும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது காங்கிரசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.,க்களுக்கு ஒதுக்குவதற்காக, 517 பங்களாக்கள் மற்றும்  அடுக்குமாடி குடியிருப்புகளை பார்லிமென்ட் செயலக அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர். இதில், ஏற்கனவே எம்.பி.,க்களாக இருந்தோர், மீண்டும் வெற்றி பெற்று எம்.பி.,க்களாக ஆகியிருந்தால், அவர்கள் தாங்கள் ஏற்கனவே வசித்த பங்களாக்களை மீண்டும் ஒதுக்கக் கோரி விண்ணப்பிக்கலாம்.

இதை நிர்வகிக்கும் அதிகாரிகள், விண்ணப்பத்தை பரிசீலித்து, முன்னுரிமை அடிப்படையில் பங்களாக்களை ஒதுக்கீடு செய்வர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்களின் பரம்பரை தொகுதியாக கருதப்படும், அமேதியில் போட்டியிட்ட அந்த கட்சித் தலைவர் ராகுல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.

எனினும், கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், புதிய எம்.பி.,க்களுக்கு பங்களா ஒதுக்கீடு செய்வதற்காக, காலியாக உள்ள பங்களாக்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், டெல்லி துக்ளக் சாலையில் உள்ள ராகுல் வசிக்கும் அரசு பங்களாவும் இடம் பெற்றுள்ளது.

2004ம் ஆண்டு முதல் ராகுல் அந்த பங்களாவில் வசித்து வரும் நிலையில், தற்போது, அவரது பங்களாக காலியாக உள்ள பங்களாக்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பங்களா வேறொரு எம்.பி.,க்கும் ஒதுக்கப்பட்டு, வயநாட்டில் வெற்றி பெற்ற ராகுலுக்கு புதிய பங்களா ஒதுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.