2030க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம்!!

2030க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) நிலவிற்கு சந்திரயான் -I விண்கலத்தை கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் நீர் இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து அனுப்பியது. 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுட்காலம் முடிவடைந்தது. சந்திரயான் -I திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, சந்திரயான் -II விண்கலம் உருவாக்கப்பட்டு நிலவுக்கு அனுப்புவதற்கான இறுதிப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான திட்டமான சந்திரயான்-II செயற்கைக்கோள் வரும் ஜூலை மாதம் 15ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 
தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " 2030க்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி விண்வெளி நிலையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சந்திரயான் -II விண்கலம் செலுத்தப்பட்ட பின்னர், நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்திற்காக அடுத்த 6 மாதத்தில் 2 முதல் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். திட்டக்குழுவுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து 2022 ஆகஸ்ட் மாதத்திற்குள் திட்டம் முழுவதுமாக நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.