Smart Lamp Poles தொடர்பிலான யாழ் மாநாகரசபை உடன்படிக்கை!!

உடன்படிக்கை 2019 தொடக்கம் 2028ம் ஆண்டு வரைக்கும் 15.05.2019 இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2ம் தரப்பு EDOTCO - (AXIATA குழுமத்தின் கிளை நிறுவனம் - டயலொக் குடும்பம்) இற்கும் 1ம் தரப்பு யாழ்மாநகர சபைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு துாணுக்குரிய மாத நிலையான வாடகை 3000 ரூபா மட்டும் (மலிவா இருக்கு.) மாநகர சபைக்கு செலுத்தவேண்டும். மொத்தம் 18 துாண்கள்(648,000 வருட வாடகை வரும். அந்த துாணில் 2ம் தரப்பு வேறு நபர்களுக்கு ”சிறிய செலுலர் அன்ரெனா” பொருத்தி உழைக்கலாம். ஒரு துாணில் அவ்வாறு அன்ரெனாக்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் 2000 ரூபா வாடகையினை மாநாகரசபைக்கு 2ம் தரப்பு வழங்கவேண்டும் ( அவன் எத்தினை பொருத்தியிருக்கிறான் என்று கண்டுபிடிக்க எங்கட ஆட்கள் ஏணிவச்சு ஏறுவாங்களாக்கும். அதை அவன் எவ்வளவுக்கு வாடகைக்கு கொடுக்கிறான் என்பதும் இவங்களுக்கு பிரச்சனையில்லை அதால உழைப்பு 100 வீதம் 2ம் தரப்புக்கு உறுதி., அப்பிடி என்றால் இனி 5G 4G இற்கு இவங்க தான் ஏக பிரதிநிதி. (இதை சிறீலங்கா ரெலிகொம் எடுத்திருக்கலாம்).

2ம் தரப்பு உரிய அரச வணிக வரியினையும் மாநகர சபைக்கு கட்டவேண்டும் என உடன்படிக்கை கூறுகின்றது. சும்மா சின்ன கடைக்கே பல்லாயிரம் புடுங்கிறாங்கள் அவங்களுக்கு எவ்வளவோ யாருக்குக்கு தெரியும்
ஆறு 15 மீ உயர துாண்களும் பன்னிரண்டு 20 மீ துாண்களும் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தின்படி நிறுவ உடன்பாடு எட்டப்பட்டுள்ளது ( அந்த பிளான் கிடைக்கவில்லை )
அந்த பிளானில் இருந்து வேறுபடின் மாநகரசபையினால் நியமிக்கப்படும் வல்லுனர்குழுவின் அனுமதி பெறப்படவேண்டும்
துாண்களை நிறுவ முன்பாக இந்த உடன்படிக்கைக்காக 5 லட்சம் முற்பணமாக செலுத்தி 2ம் தரப்பு துாண்களை அமைக்கமுன்பாக சபையில் இதற்குரிய விண்ணப்ப
படிவங்களை பெற்று பூரணப்படுத்தி அனுமதி பெறப்படவேண்டும்
அதைவிட நல்லுார் கோவில் நிர்வாகத்தினர் உட்பட (ஏன்டா ? அவங்கள் எப்ப தனியரசானவங்கள்) வீதி அபிவிருத்தி அதிகாரசபை மத்திய சூழல் அதிகாரசபை நகர அபிவிருத்தி சபை , தொலைத்தொடர்பு அதிகார சபை . விமானப்போக்குவரத்து அதிகாரசபை பிரதேச சுகாதர அதிகாரி ஆகியோரிடமும் அனுமதி பெற்று அதன்பிரதிகள் ஆவணப்படுத்தலுக்காக மாநகர சபையில் சமர்ப்பிக்கவேண்டும்
துாணில் LED Panel (விளம்பர திரை) பொருத்த மாநகர சபையில் மீண்டும் அனுமதி பெறப்படவேண்டும் அதற்குரிய கட்டணங்களும் அரச கட்டணப்பட்டியல் படி சபைக்கு செலுத்த வேண்டும்
6மாத விளம்பர வருமான அறிக்கை சபைக்கு வழங்கவேண்டும் விளம்பர வருமானத்தில் 40வீதம் மாநகர சபைக்கு செலுத்த வேண்டும் 3 வருசத்துக்கு ஒரு முறை இந்த வருமானம் 10 வீதத்தினால் அதிகரித்து சபைக்கு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு துாணிலும் LED விளக்கு 2ம் தரப்பினால் பொருத்தப்படவேண்டும் இதன் பராமரிப்பும் அவர்களுக்குரியது.
மாநாகர சபையினர் கேடடுக்கொண்ட எண்ணிக்கை மற்றும் இடங்களின் படி (எங்க எவ்வளவு என்று தெரியாது) 2ம் தரப்பு கண்காணிப்பு கமெராக்கள் துாணில் பொருத்தவேண்டும்
கண்காணிப்பு கமெராக்களுக்கான மின்சாரம் 2ம் தரப்பினால் வழங்கப்படவேண்டும் ( அது எப்படி என்று வரையறுக்கப்படவில்லை)
கண்காணிப்பு கமெரா பராமரிப்பு மாநாகரசபைக்காக 2ம் தரப்பினர் செய்வர்.( 2ம் தரப்பு சபையிடம் கட்டணம் வாங்குவாங்களா அதுக்கு பில் அனுப்பி காசு பெறுவாங்களோ தெரியல)
மாநகரசபை கண்காணிப்பு கமெராவை பயன்படுத்தலாம் ஆனால் பழுதாக்க கூடாது. அத பழுதாக்கினால் மாநகர சபை 2ம் தரப்புக்கு அதற்குரிய பதிலீட்டு பெறுமதியை கொடுக்க வேண்டும். (யாரும் கல்லெறிஞ்சு உடைச்சாலும் அதுக்கு மாநகரசபைதான் பொறுப்பு என்று நினைக்கிறன்).
கண்காணிப்பு கமெராக்களின் கட்டுப்பாடு பொறுப்பு மாநகரசபையிடம் இருக்கும். எப்ப எப்ப கடவுச்சொல் கேட்டாலும் 2ம் தரப்பு அத வழங்க வேண்டும்( ஆக அதன் கட்டு்பாடு 2ம் தரப்பிட்ட தான் இருக்கு. ஆனா எழுத்தில மட்டும் மாநகர சபை பொறுப்பு போல)
சிறிய அன்ரனாக்கள்( தொழில்நுட்ப வரையறை ஏதும் போட நேரம் கிடைக்கல போல)) பொருத்த 2ம் தரப்புப்புக்கு உடன்படிக்கை அனுமதியளிக்கிறது
முக்கிய விடயம்
-------------------------------------
2ம் தரப்பு சிமாட் சிற்றி தொடர்பிலான அறிவை 1ம் தரப்புடன் பகிர்ந்து கொள்ளும்.
2ம் தரப்பு ”மலேசியாவில்” அப்படி ஒரு பயிற்சி ஒழுங்கு ”செய்தால் ” ( வடிவா வாசியுங்கோ) 2ம்தரப்பு ஆனது மாநாகரசபை அலுவலர்கள் 3 பேருக்கான செலவை வழங்கும் (எந்த உத்தரவாதமும் இல்லை) மலேசியாவில் நடக்காட்டி சங்கம் பொறுப்பில்லையாக்கும்.
உடன்படிக்கை அனெ்ரெனா , விளக்கு , பாதுகாப்பு கமெரா , விளம்பர திரை அவற்றை மட்டும் பேசியிருக்கிறது.அது தொடர்பிலான விதிமுறைகளை 2ம் தரப்பு கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறுகின்றது. வேறு விடயங்கள் பற்றி மூச்சில்லை.துாணில் வேற ஏதாவது பொருத்த என்ன நடைமுறை என்று வரையறை இல்லை. துாண் யாருக்கு சொந்தம் என்றும் வரையறை இல்லை. மொத்தமாக துாண் வைக்கிற இடத்தை உறுதி முடிக்காம குத்தகை எ்ழுதிக்கொடுத்திருக்கிறார்கள் போல இருக்கு.
ஆக மொத்தத்தில் உறுதிப்படுத்தப்படாத மலேசிய பயண சலுகை்ககாக இறுக்கப்படாத வரையறைகள் பல அற்ற வருமானம் குறைந்த தீமைகள் பல நன்மைகள் சில கொண்ட ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் காலம் போகவில்லை இதை திருத்தலாம்.
அதை மாநகர சபை தானே எடுத்து நடத்தினால் நல்ல வருமானம் வரும் அதை செய்திருக்கலாம் ரெண்டர் எ்ப்ப கோல் பண்ணினவங்கள் என்டு தெரியல தெரிஞ்சிருந்தா ஒரு விலைய போட்டு நாம ஆட்டைய போட்டு நிரந்தர வருமானம் ஒன்றை பெற்றிருக்கலாம்.
மொழியாக்கம் த.தவரூபன்
பதிவு  த.தவரூபன்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo  #SmartlampPole #jaffna #JMC

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.