தமிழீழ தேசியக்கொடி உலக நாட்டு கொடிகளுடன் கம்பீரமாய் பறந்தது!!

இத்தாலி ஜெனோவா மாநகரில் நேற்றையதினம் “உலக அமைதிக்கான பல்லினக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.


பல நாடுகளை சேர்ந்த மக்கள் பங்கேற்ற இந் நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியும் ,பலநாட்டு கொடிகளுடன் ஏற்றி பறக்கவிடப்பட்டது.
இத்தாலியில் எமது தேசியக் கொடியானது வானுயர கம்பீரத்துடன் பறந்த காட்சி விடுதலை போராட்டத்தின் வெற்றியின் அறிகுறி.

எமது குருதியில் உயர்ந்த கொடியும் ,எமது தியாகத்தில் நிமிர்ந்த கொடியும் ,எமது இன அழிப்பினில் பிறந்த கொடியும் ,சிங்கள இனவாத கொடிக்கு நிகராக எமது தமிழீழ தேசியக்கொடி இன்று “இத்தாலி ஜெனோவா”,மாநகரில் கம்பீரத்துடன் பறந்தது.

இதனை பார்க்கும்போது இந்த உலகம் காலம் கடந்து எமது தமிழ் இனத்தைப் புரிந்து கொண்டுள்ளதாகவே எண்ணமுடிகின்றது.

நாம் எந்த மக்களினதும் உரிமையை பறிக்கவில்லை.எவரது மண்ணையும் ஆக்கிரமிக்கவில்லை காலம் காலமாய் நாம் வாழ்ந்த மண்ணையும்,இழந்த உரிமைகளையும் மீட்கவே போராடினோம்.உலகமே எமது தார்மீக உரிமையை இனியாவது அங்கீகரிக்கட்டும்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் மீது நடத்தப்பட்ட இன அழிப்பின் பின்னர்,நாம் எவ்வளவோ கஸ்டத்திலும் ,மன உளைச்சல்களின் மத்தியிலும் எமது போராட்டத்தின் வீச்சு குறையாமல் கடந்து வந்ததின் பிரதிபலிப்பாகவே இந்த வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை எந்த ஆக்கிரமிப்பும்,அடக்குமுறையும்,இன அழிப்பும் எமது விடுதலை போராட்டத்தை தடை செய்யமுடியாது என்பதை இந்நிகழ்வானது நிரூபித்து காட்டியுள்ளமை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.