ஓமான்வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது பாரிய தாக்குதல்கள்!!📷

ஓமான்வளைகுடாவில் எண்ணெய்கப்பல்கள் மீது பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டடுள்ளது-எண்ணெய் விலை உடனடியாக அதிகரித்தது.ஓமான் வளைகுடாவில் எண்ணெய்க்கப்பல்கள் மீது தாக்குதலொன்று இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன.பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களுடன் பயணித்துக்கொண்டிருந்த புரொன்ட் ஓல்டெயர் என்ற  கப்பல் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


குறிப்பிட்ட கப்பல் நீரில்மூழ்கி விட்டது என ஈரானின் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.இதேவேளை குறிப்பிட்ட கப்பல் மூழ்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இன்னொரு எண்ணெய் கப்பல் மாலுமிகள் இன்றி நீரில் தத்தளிக்கின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹ்ரைனை தளமாக கொண்ட அமெரிக்காவின் கடற்படை  குறிப்பிட்ட கப்பல்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.இதேவேளை குறிப்பிட்ட கப்பல்களை இலக்குவைத்து டோர்படோ தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.குறிப்பிட்ட கப்பல்கள் கடல்கண்ணி தாக்குதலிற்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கடற்பரப்பில் நான்கு எண்ணெய்க்கப்பல்கள் தாக்கப்பட்டமைக்கு ஈரானே காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டிவரும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை இந்த தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.