வவுனியா, தரணிக்குளம் புதிய நகருக்கான பேரூந்து சேவை ஆரம்பம்!

வவுனியா தரணிக்குளம் புதிய நகருக்கான பேரூந்து சேவை இன்று(திங்கட்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


வவுனியா தரணிக்குளம் புதிய நகருக்கருகில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றபோதிலும் பேரூந்து சேவைகள் இல்லாத நிலையில் 3 கிலோமீற்றர் தூரம் நடந்து வந்தே பேரூந்து சேவையினை பெறவேண்டிய நிலை காணப்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தரணிக்குளம் பழைய கிராம மக்களுடன் இணைந்து தமது கிராமத்திற்கு பேரூந்து சேவையினை பெற்றுத்தரவேண்டும் என அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகித்து வந்திருந்தனர்.

இந்நிலையில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் மக்களின் நன்மை கருதியும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் இன்னல்களை கண்ணுற்றும் தம்மால் பேரூந்து சேவையினை வழங்க முடியும் என உறுதியளித்திருந்தனர்.

இதன் காரணமாக இன்று காலை 10 மணிக்கு பேரூந்து சேவை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பகுதிக்கு தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரி. கே. ராஜேஸ்வரன் மற்றும் சங்கத்தின் செயலாளர் உட்பட சிலரும் குறித்த பகுதிக்கு வருகை தந்து பேரூந்து சேவையினை ஆரம்பிக்க வருகை தந்திருந்தனர்.

எனினும் பேரூந்து செலவ்தற்கான வீதி போதுமானதாக இன்மையால் பேரூந்து சேவையினை ஆரம்பிக்க முடியாதநிலை காணப்பட்டது.

இதன் காரணமாக வீதியை அகலமாக்கிய பின்னர் பேரூந்து சேவையினை ஆரம்பிக்கமுடியும் என தெரிவிக்கப்பட்ட நிலையிலும் கிராம மக்கள் தமக்கான சேவையினை ஆரம்பிக்குமாறு வீதி தொடர்பான செயற்பாடுகளை தாம் முன்னின்று சில நாட்களுக்குள் திருத்தம் செய்து தருவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த வீதியை பிரதேச சபையுடன் கலந்துரையாடி அகலமாக்கி தருவதாகவும் பேரூந்து சேவையினை ஆரம்பிக்குமாறும் கோரியிருந்தார்.

இதனையடுத்து பேரூந்து சேவையினை குறித்த கிராம சேவகர் மற்றும் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் இணைந்து ஆரம்பித்து வைத்திருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo







கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.