ஈரானின் அணுசக்தி ஒப்பந்த மீறல் குறித்து பிரித்தானியா கவலை!

முக்கிய வெளிநாட்டு சக்திகளுடன் ஈரான் கையெழுத்திட்ட 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியிருப்பது மிகுந்த கவலையளிப்பதாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் அமைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


ஒப்பந்தத்த்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதை விட அதிகமான தரம் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் கையிருப்பில் வைத்திருப்பதை சர்வதேச அணுசக்தி நிறுவனம் நேற்றையதினம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் இந்த ஒப்பந்த மீறல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவிவரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்யும் வகையில் அமைந்துள்ளது.

ஈரானின் இந்த செயல் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இங்கிலாந்து தனது கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதாக பிரதமர் தெரேசா மே-யின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒப்பந்தத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பு ஈரான் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதைப் பொறுத்தது என்பதை நாங்கள் தொடர்ந்து தெளிவுபடுத்துகிறோம் எனவும் அதனால் இந்த நடவடிக்கையை மாற்றியமைக்க நாங்கள் ஈரானை கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.