செயலிகள் ஒருங்கிணைத்த போராட்டம் !!

நவீன உலகில் இதுவரை பார்த்திராத போராட்டத்தை மீண்டுமொருமுறை ஹொங்கொங் மக்கள் நடத்திக்காட்டியுள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர்கள், தலைவர்கள் எனக் கூறும் அளவிற்கு யாருமே இந்த போராட்டங்களை வழிநடத்தவில்லை என்பதே சிறப்பம்சமாகும்.

ஆனால், ஹொங்கொங் முழுவதும் போராட்டங்களில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் குறைந்தது ஒரு டெலிகிராம் (குறுஞ்செய்தி செயலி) குழுவில் இருப்பதாகவும், அவற்றை நிர்வகிப்பதற்கு பலர் தன்னார்வலர்களாக செயல்படுவதாகவும் போராட்ட குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்து நடைபெற்று வரும் இந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்கும் மக்களை, நூற்றுக்கணக்கான டெலிகிராம் குழுக்களை நடத்தும் சிலர் வழி நடத்துகின்றனர்.

ஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை தாய்வான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான பிரேரணையை அரசு நடைமுறைப்படுத்த கூடாது என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டங்களுக்கான அழைப்புகள் செய்தி அறிவிப்புகள், மறையாக்கம் செய்யப்பட்ட குறுஞ்செய்தி செயலிகள் வழியாக முகம் தெரியாதவர்களால் விடுக்கப்படுகின்றன.

ஒரு சில குழுக்களில் எழுபது ஆயிரம் பேர், அதாவது ஹொங்கொங்கின் மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஒரு சிலர் எங்கு, எப்போது போராட்டம் நடைபெறும் என்று அவ்வப்போது தெரிவித்து வரும் வேளையில், மற்ற உறுப்பினர்கள் போராட்டத்திற்கு எதிராக அரசாலும், பொலிஸாராலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், வழக்கறிஞர்கள், முதலுதவி அளிப்பவர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்றோருக்கென பிரத்யேக குழுக்கள் டெலிகிராம் செயலியில் செயல்பட்டு வருகிறது. போராட்டம் தொடர்பான அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அவர்கள் வழங்குவார்கள்.

போராட்டம் தொடர்பாக பல்வேறு விடயங்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதற்கும், இணைந்து செயல்படுவதற்கும் இதுபோன்ற கைத்தொலைபேசி செயலிகள் மிகவும் பயன்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், முன்னதாக பிரித்தானியாவின் நிர்வாகத்திலிருந்து ஹொங்கொங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டதன் 22ஆவது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், ஹொங்கொங் அரசின் அண்மைய செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் மக்கள் நேற்று முற்பகல் அதன் நாடாளுமன்ற அவையின் வளாகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.