அதிரடியாக கைது செய்யப்பட்டார் பொலிஸ்மா அதிபர் பூஜித!!

கைது செய்யப்பட்ட கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


நாரஹேன்பிட்ட வைத்தியசாலைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்ற கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கொலைக்குற்றச்சாட்டு சந்தேக நபர்களாகக் கருதி, நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சட்டமாக அதிபரினால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையினால் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.