செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் “தமிழர் திருவிழா” – மக்களுக்கு அழைப்பு!!

முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் “தமிழர் திருவிழா” எனும் தொனிப்பொருளில் நாளை மறுதினம் 108 பானைகளை வைத்து பொங்கல் விழாவை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதன்படி குறித்த பொங்கல் தினமன்று சிங்கள பௌத்த மயமாக்கலினால் பறிபோய்கொண்டிருக்கும் எல்லைக் கிராமமான கொக்குத் தொடுவாயின் வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாரம்பரிய மடப்பண்டமெடுத்தலும் “108” பானைப் பொங்கலும் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான மக்கள் பலத்தை காண்பிக்கும் வகையில் இளைஞர்கள், யுவதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்டோரை மதங்களை கடந்து நில ஆக்கிரமிப்புக்கு எதிரான உணர்வுள்ள தமிழர்களாய் ஒன்றிணையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தத் தமிழர் திருவிழாவான “108” பானைப் பொங்கல் விழாவினை ஆலய அறங்காவலர் குழுவுடன் இணைந்து சமூக வலைத்தள நண்பர்கள் ஒழுங்கமைத்து முன்னெடுக்கவுள்ளனர்.

இதேவேளை, இந்தப் பொங்கலுக்கு வருகைதரும் மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.