சிறையிலிருந்த கணவனுக்காக போதைப்பொருள் வாங்கிய மனைவி கைது!!
சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப் பொருள் கொண்டுசென்ற மனைவி சுன்னாகம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உடுவில் மல்வத்தைப் பகுதியில் வைத்து, அதே இடத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணொருவரே நேற்று (வியாழக்கிழமை) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் முருகமூர்த்தி வீதி மல்வத்தைப் பகுதியில் இரவு சென்றுகொண்டிருந்த போது, பொலிஸார் அவரை சோதனை செய்துள்ளனர். சோதனையின் போது, அவரது கைப் பையில் இருந்து, 8 கிராமும், 400 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரை விசாரணைக்குட்படுத்திய போது, சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு கொண்டு செல்வதற்காக, வேறு நபரிடம் வாங்கிச் செல்வதாக மனைவி விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
விசாரணையின் பின்னர் பெண்ணை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை