யாழ்ப்பாண கடற்பரப்பில் அழகான அதிசயம்!!

யாழ்ப்பாணம், காங்கேசனன்துறை கடற்பகுதியில் புதிதாக இது வரை கண்டுபிடிக்கப்படாத பவளப்பாறை ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.


வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை நீர்முழ்கி பிரிவின் வீர்ர்களினால் கடந்த வாரத்தில் காங்கேசன்துறை கடல் பகுதியில் மேற்கொண்ட  நீர்முழ்கி நடவடிக்கையின் போது ஒரு புதிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கீழ் கட்டளை நீர்முழ்கி அதிகாரி உட்பட நீர்முழ்கி பிரிவினர்  மேற்கொண்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போதே, குறித்த காங்கேசன்துறை கடலில் இது வரை கண்டுபிடிக்கப்படாத பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.