பிலிப்பைன்ஸ் ஐ.நா.வின் விசாரணையை எதிர்கொள்கிறது!!

பிலிப்பைன்ஸில் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடேர்ட் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை மேற்கொள்ளவுள்ளது.


இந்த விடயம் தொடர்பாக ஐஸ்லாந்து, ஐ.நா.வில் அறிக்கை சமர்பித்துள்ள நிலையில் இதற்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு பிலிப்பைன்ஸுக்கு அழைப்பு விடுக்குமாறு அந்நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை கேட்டுக் கொண்டுள்ளன.

பிலிப்பைன்ஸில் போதைப் பொருளுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் நடத்தும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 5,000இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் பிலிப்பைன்ஸ் இராணுவத்தால் இதுவரை 20,000இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில் கடந்த வாரம் பிலிப்பைன்ஸ் பொலிஸார் போதை பொருள் கும்பலுக்கு எதிராக நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மூன்று வயதுச் சிறுமி தவறுதலாக கொல்லப்பட்டமை அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே, போதைப் பொருள் வர்த்தகர்களை சுட்டுக்கொல்லும் செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அமெரிக்கா போன்ற உலக நாடுகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தன. இருப்பினும் அதற்கெல்லாம் சற்றும் செவி சாய்க்காமல் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக் கடுமையான தண்டனைகளை அந்நாட்டு ஜனாதிபதி செயற்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.