மரணத்தில் தடம்புரளும் பாரம்பரியம் -Dr.சி.சிவன்சுதன்!!

எமது கலாசாரங்களும் பண்பாடுகளும் காலத்திற்கு காலம் மெருகேற்றப்பட்டு மேலைத்தேய நாடுகளால்கூட மதிக்கப்படுகின்ற ஒரு உன்னத நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. இது மனிதனின் உடல்,உள ஆரோக்கியத்திற்குக்கூட உறுதுணையாக வடி வமைக்கப்பட்டிருக்கிறது.


இருந்தபொழுதும் எமது சில பாரம்பரிய நடைமுறைகள் எமது மக்களின் மனநிலையிலும் உள ஆரோக்கியத்திலும் பாரதூரமான தீயதாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதுடன் பெண்களின் சமத்துவ உரிமைகளையும் பாதித்து நிற்கின்றது.

உதாரணமாக ஒருவரின் மரணச்சடங்கின்பொழுது பாரிய மனவேதனையில் இருக்கும் அவ ரின் மனைவியை அவரின் உடலை சுற்றிவரச்செய்து தாலிக் கொடியை கழற்றி போடச்சொல்லும் ஒரு சம்பிரதாயமும் பொட்டு, பூ என்பவற்றை அகற்றச்சொல்லும் ஒரு சம்பிரதாயமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது வேதனையில் துவண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பெரும் மனத்தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.

மனைவியின் இழப்பின் பொழுது கணவன் அனுபவிக்காத பல இடர் பாடுகளை கணவனின் இழப்பின் பொழுது மனைவி எதிர்கொள்ளும் ஒரு துர்ப்பாக்கிய நிலை இருந்துவருகிறது. ஒரு மனிதனின் இறப்பின் பொழுது அந்த துயரத்திலிருந்து அந்தக் குடும்பத்தினர் மீள்வதற்கான சில புதிய பாரம்பரிய முறைகளை நாம் மெரு கேற்றிக் கொள்ள முடியும்.

ஆனால் மரணச்சடங் கின் பொழுது பெருந்துயருற்றிருக்கும் மனைவியை தாலியை கழற்றி இறந்தவரின் உடல்மீது போடுமாறு கேட்டுக்கொள்வதோ அல்லது அங்கே வைத்து பூவையோ பொட்டையோ அகற்றுமாறு கேட்டுக்கொள்வதோ மனிதத்துவப் பண்பு ஆகாது. இது பல உளவியல்தாக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

சமய, சமூக பெரியவர்கள் எமது இந்த நடைமுறைகளை தவிர்த் துக்கொள்வதற்கு தமது பெரும் பங்களிப்பை ஆற்றமுடியும். காலத்திற்கு ஏற்றாற் போல் எமது பாரம்பரிய நடைமுறைகள் மெருகேற்றப்படுவது அன்றுதொட்டு நடை பெற்று வருகிறது.

எனவே இவ் வாறான நடைமுறை மாற்றங்கள் ஒரு தவறான காரியம் என்று கொள்ளப்படமாட்டாது.

Dr.சி.சிவன்சுதன்
பொதுவைத்திய நிபுணர்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #ColomboNo comments

Powered by Blogger.