தன் மக்களையும் மண்ணையும் நேசித்த மகான்..!

இந்த
அவர்கள் என்னை
கிழித்தெறிந்திருக்கலாம்..

தங்கள்
இனவெறி தீரும்வரை
பாலியல் வல்லுறவால்
பழி தீர்த்திருக்கலாம்
இந்த மகாபகைவன்..!
என்
நிர்வாணத்தை
நீண்ட காணொளியில்
முழு நீலப்படமாக்கியிருக்கலாம்..!
தங்கள்
கேவல விந்துக்களால்
என் குலப்பபையை நிறைத்திருக்கலாம்..!
என்
பெற்றோர் உற்றார் உறவினர்
மத்தியில்
என் பிணத்தின் மீதும்
காமவெறியை கக்கியிருக்கலாம்..!
தங்கள் ஒவ்வொருவர்
படுக்கையிலும்
என்னைப்பகிர்ந்து
பாழாக்கியிருக்கலாம்..!
வாழ்நாள் முழுவதும்
விபச்சாரியாக்கிய பணத்திலே
தங்கள் நாட்டை
தரமுயர்த்தியிருக்கலாம்...!
என்னவனை
என்னன்பானவனை
காட்டித்தரும்படி
தங்கள் காமக்குழலை
திணித்திருக்கலாம்..!
என்னவன்
அவனொரு போராளி
என்னைவிடவும்
தன் மக்களையும் மண்ணையும்
நேசித்த மகான்..!
அவனுக்காக இவைகளெல்லாம்
தியாகங்களாய்
காதலின் யாகங்களாய்
நானின்னும்
நானாகிறேன்....!

காதலுடன்.  கங்கை. பேரரசி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.