கிரீஸில் கடும் புயல் - பாதிப்பு தொடர்கிறது!!

கிரீஸில் வீசிய கடும் புயல் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.  கிரீஸின் தெசலோனிகி நகருக்கு அருகே ஹல்கிடிகி பகுதியில் நேற்று(புதன்கிழமை) கடும் புயல் வீசியதுடன்,
ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.  இதன்போது ஆறு வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்திருந்ததுடன், 30 காயமடைந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.  எனினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 100 ஆக அதிகரித்துள்ளதாக கிரீஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து கிரீஸில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன், மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  கிரீஸினைத் தாக்கிய கடும் புயல் காரணமாக அதிகளவான சுற்றுலாத்தலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், இதன்போது ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து கணக்கிடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.