சிவகார்த்திகேயன் பாடிய ஃபெர்ஸ்ட் சிங்கிள் காணொளி வெளியீடு!!

நடிகர் வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிக்ஸர்’ திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடிய கானா பாடலின் ஃபெர்ஸ்ட் சிங்கிள் காணொளி வெளியாகியுள்ளது.


இந்த பாடல் நாளை (சனிக்கிழமை) வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ஜிப்ரான் இசையில் ஒரு பாடல் ஒன்றை பாடியிருந்தார்.

காதல் கலந்த நகைச்சுவை மற்றும் அக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கதாநாயகன் வைபவுக்கு ஜோடியாக ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்த பாலக் லால்வாணி நடித்துள்ளார். இவருடன் ராதாரவி, சதிஷ், ராமர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து தயாரிக்கின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற படங்களில் நடித்தவர் தான் வைபவ். ஆரம்ப காலத்தில் ஐந்தில் ஒருவராக நடித்து வந்த வைபவ் கப்பல் படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஹலோ நான் பேய் பேசுறேன், மேயாத மான் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி இப்டத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் பிரபு நடித்த சின்ன தம்பி படத்தில் இடம்பெரும் கவுண்டமணி கதாபாத்திரம் போன்று இந்த படத்தில் வைபவ்விற்கு மாலை 6 மணி ஆனால் பார்வை தெரியாது. இதை சமாளித்து அவர் எப்படி காதலிலும் வாழ்க்கையிலும் வெற்றிபெறுகின்றார் என்பதை பற்றியே இந்த கதை நகர்கின்றது.

இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.