கட்டுவாப்பிட்டிய தேவாலத்திற்கு ஊடகவியலாளர் அணியொன்று விஜயம் !!📷
ஈஸ்டர் தினத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் அவ்வாலயத்திற்கு இலங்கை தமிழ் முஸ்லிம், சிங்கள ஊடகவியலாளர் அணியொன்று விஜயம் மேற்கொண்டிருந்து.
அங்குள்ள பொறுப்பு பங்குதந்தையுடனும், உளநல வைத்தியர் மற்றும் பிரிதொரு வைத்தியருடனும் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது
சேதமடைந்த, சிதைவுற்ற பௌதீக ரீதியான வளங்கள் மீள புனரமைக்கப்படுகின்றன, ஆனால் சிதைவுற்ற, பிளவுப்பட்ட இன, சமூக தனி மனித உறவுகள் இன்னமும் மீள கட்டியெழுப்படவில்லை. சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் போதுமானதமாக இல்லை
இந்த தாக்குதலில் 24 குழந்தைகள் தாய், தந்தை மற்றும் இருவரையும் இழந்துள்ளனர். இவர்களின் எதிர்காலம், நம்பிக்கை தரும் விதத்தில் மீள கட்டியெழுப்படல் வேண்டும், மேலும் இந்த தாக்குதல் காரணமாக 14 விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர். இவர்களது வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படல் வேண்டும், அத்தோடு தாக்குதல் காரணமாக மாற்றுவலுவுள்ளோர்களாக காணப்படுகின்றவர்களின் அனைத்து விதமான நலன்களும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
மூன்று மாதக் காலத்தில் பௌதீக ரீதியானவற்றில் ஏற்பட்டுள்ள சிதைவுகளை மீள நிரந்தரமாக புனரமைப்பதில் காட்டுகின்ற அக்கறையை விட ஏனைய விடயங்களில் அதிக அக்கறை செலுத்தப்படல் வேண்டும்.
தந்தையை, தாயை, இருவரையும் இழந்த பிள்கைள், விதவைகள், மாற்றுவலுவுள்ளோர்களின் வலியும், அவர்களின் உணர்வுகளும் மிக கொடியது என்பது எமக்கு நன்கு தெரியும் தமிழ் சமூகத்தில் அதிகமாக நாம் இவ்வாறனவர்களுடன் நாளாந்தம் பழகி வருகின்றோம்.

கருத்துகள் இல்லை