பணம் மற்றும் வாகனத்துடன் சிறுவர்கள் 900 கிலோ மீட்டர் பயணம்!

அவுஸ்ரேலியாவில் மீன் பிடிக்க செல்லும் ஆர்வத்தில் குடும்பத்தினருக்கு தெரியாமல் பணம் மற்றும் வாகனத்தைச் திருடிச் சென்ற ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்களை 900 கிலோமீட்டர் தூரத்தில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அவுஸ்ரேலியாவில் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாகனங்களை செலுத்தும் உரிமம் வழங்கப்படுவதில்லை.


இந்தநிலையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கிரேஸ்மேர் பகுதியில் வசிக்கும் ஒரு சிறுமி மற்றும் 3 சிறுவர்கள் தங்களது குடும்பத்தினருக்கு தெரியாமல் வெகுதூரம் சென்று மீன்பிடிக்க திட்டமிட்டனர். அவர்களில் ஒருவர் தனது வீட்டில் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு செல்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்னொருவர் தனது வீட்டில் இருந்த ஜீப் வாகன திறப்பை திருடிக்கொண்டு சென்றார். பின்னர் இவர்கள் நால்வரும் மீன்பிடி தூண்டில்களுடன் குயின்ஸ்லாந்தில் இருந்து வாகனத்தில் புறப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் காரை செலுத்த, பயணத்தின் இடையில் வழியில் சுமார் 140 கிலோமீட்டர் தூரத்தை கடந்தபோது, பெட்ரோல் தீர்ந்து விடுவதுபோல் தோன்றியதால் பனானா என்ற நகரில் ஆளில்லாத ஒரு பெட்ரோல் விநியோக நிலையத்தில் தாங்களாகவே பெட்ரோலை நிரப்பிக் கொண்டு அதற்கான பணம் ஏதும் செலுத்தாமல் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

இவர்கள் 4 பேரும் காரை மாற்றி, மாற்றி செலுத்தியவாறு சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தை கடந்து நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சென்றடைந்தனர்.அங்கிருந்த போக்குவரத்து பொலிஸார் சிறுவர்கள் மட்டும் தனியாக ஜீப் வாகனத்தில் வருவதை கவனித்து அவர்களை விரட்டுவதுபோல் செல்லாமல் மெதுவாக பின்தொடர ஆரம்பித்தனர்.

தங்களின் வாகனத்திற்கு பின்னால் வரும் பொலிஸார் தங்களைத்தான் பின்தொடர்கிறார்கள் என்பதை கவனித்து விட்ட சிறார்கள் கிராப்டன் நகரின் அருகே காரை ஓரமாக நிறுத்தி பயத்தில் உள்பக்கமாக தாளிட்டுக் கொண்டு வெளியேவர மறுத்தனர்.

பின்னர், வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை தடியால் அடித்து உடைத்து கதவை திறந்த பொலிஸார் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வசிக்கும் அந்த சிறுமி மற்றும் சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் அளித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொலிஸாரிடம் சிக்கிய சிறுமி, சிறுவர்கள் அனைவரும் 10 முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.