தென்றலே மௌனம் ஏன்!! சிறுகதை!!
காலைப்பனி மூசிப்பெய்து கொண்டிருந்தது. போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான் கோமகன்.
கல்யாணக் கனவுகள் நேரத்தை தத்தெடுப்பதால் தூக்கம் தூரமாகின்றதும் அதனால் அதிகாலைத் தூக்கம் ஆளைச்சாய்ப்பதும் இப்போதெல்லாம் அவனுக்கு அடிக்கடி நிகழ்கின்றது. பூவழகியின் கொஞ்சல் மொழியில் அவன் ஆழ அமிழ்வதை அந்த ராத்திரியை அவனையன்றி வேறு யாரறிவர், அவன் பத்து வார்த்தை பேசிவிட்டால் அவள் “ம்” என்ற ஒற்றை வார்த்தை சொல்லும் அழகோ அவனுக்கு பேரழகாய் தெரியும். பெயரில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரு பூவைப்போலத்தான் அவள். அதிர்ந்து பேசினாலே அதிர்ந்துவிடும் மெல்லிய குணம் கொண்டவள். அவள் எப்படித்தான் தாதித்தொழில் படித்து தாதியாய் பணிபுரிகிறாளோ என்பது அவனுக்கு புதிரான ஒன்று.
நகரத்தின் அரசவைத்தியசாலையில் தற்போது தாதியர் பணிக்காக இணைந்துள்ள சிலரில் அவளும் ஒருத்தி. கோமகனின் நேசத்திற்குச் சொந்தமானவள். அவளைக் கண்ணட அந்த தருணம் அவனுக்குள் சுடர்விட்டது.
‘கோமகன் பொறியியல்’ நிறுவனத்தின் சொந்தக்காரன் அவன். நாடெங்கும் பல கிளை நிறுவனங்களைக் கொண்ட மிகப்பெரிய நிறுவனத்தில் இருநூறிற்கு மேற்பட்ட தொழிலாளர்களை இயக்கிக்கொண்டிருப்பவன். திடீரென்று காய்ச்சல் அதிகமாகிவிட தனியார் வைத்தியசாலையை நாட அவர்கள் டெங்கு காய்ச்சல் என்றுகூறி அரச வைத்தியசாலைக்கு அனுப்பிவிட உண்மையில் உயிர்பயம் வந்தது கோமகனுக்கு. வேறுவழியின்றி அவன் தன் கணக்கு வழக்கு தொடர்பான பல விடயங்களை தனது உதவியாளரிடம் சொல்லிக்கொண்டிருக்க, அங்கே பிரசன்னமான தாதிப்பெண், அவனைப் பார்த்து இயல்பாய் முறுவலித்தபடி, “எந்த பயமும் வேண்டாம், உங்களுக்கு சாதாரண காய்ச்சல் என நினைச்சுக்கொள்ளுங்க, நாங்கள் எல்லாரும் எதுக்கு இருக்கிறோம், பயப்படாம இருந்தாலே சரியாயிடும் “ என்றார். அப்போது அவளை ஆழமாகப் பார்த்த அவனுக்கு இறக்கையின்றிய ஒரு தேவதை போலவே அவள் தென்பட்டாள். அந்த புன்னகையும் அவள் வார்த்தையின் தாளத்திற்கேற்ப அசைந்த உதடுகளும் அவனுக்கு வேறொரு உலகத்தைக் காட்டியது. அதுதான் அவளை அவன் கண்ட முதல் தருணம்.
இதுவரை வேலை, தொழில் அதன் வளர்ச்சி என ஓடிய அவனுக்குள் இப்போது முதல் முதலாய் சின்னதாய் அரும்பியது ஒரு நேசம். சோர்வுடன் திரும்பிப்படுத்துக்கொண்டான் அவன். நேரந்தவறாத சோதனைகளும் ஊசியும் மருந்தும் அம்மாவின் பிரார்த்தனையும் அக்காஅத்தானின் வேண்டுதலும் ஒரே தங்கையின் கண்ணீரும் அவனைக் குணப்படுத்தியது என்றனர் அனைவரும், ஆனாலும் அவளது அந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளே முதலிடம் என எண்ணினான் அவன். அவன் அருகில் வருகையிலேயே அவனுக்குள் இனம்புரியாத உணர்வுகள் கூத்தாடும், அவளென்னவோ அவனை நேருக்கு நேராய்த்தான் பார்த்துவைப்பாள். பார்வையை தாழ்த்திக்கொள்வான் அவன். வெள்ளை உடையில் சின்னதேவதை போலவே தெரியும் அவளிடம் அங்கிருந்த அனைவரும் அன்பும் நேசமும் கொண்டிருந்தனர். நோயாளர்களுக்கு மருந்தைவிட கனிவே தேவை என்பது அவளுக்கு நன்றாகத்தெரியும் போல எண்ணினான். எப்போதும் புன்னகை ததும்பும் அவள் உதடுகளும் கருணையை சொந்தமாக கொண்ட அவள் விழிகளும் தனக்கே தனக்காக வேண்டும் என எண்ணினான் கோமகன்.
பத்து நாட்கள் வைத்தியசாலை வாசம் முடித்து அன்று வீட்டிற்குச்செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருந்தபொழுது அம்மாவை அருகே அழைத்தான். விசித்திரமான அவனது அழைப்பில் ஆச்சரியமாய் அவனைப்பார்த்த தாயார், அருகில் சென்று “என்னப்பா?” என்றார்.
“அம்மா, கல்யாணம் பண்ணு ----- கல்யாணம் பண்ணு என்று நச்சரிச்சீங்கள் இல்லையா, இப்போ அதுக்கு சம்மதிக்கிறேன்” என்றான்.
‘எங்கே என்ன பேசுகிறான்’ என ஆச்சரியப்பட்ட தாயார், மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டவன், பயத்தில் உளறுகிறானோ என எண்ணினார்.
ஆனால் அவனோ வேறு சொன்னான், “அம்மா, பெண் பார்க்கும் வேலையெல்லாம் உங்களுக்கு வேண்டாம், நானே பாத்திட்டேன்,” என்றவன்,
“அந்த மேசையில இருக்கிற தாதியை பாருங்கோ, அவ பெயர் பூவழகி, அவள் தான் என் மனைவியா வரணும் என்றது என்னுடைய ஆசை” என்றான்.
மகனின் வேண்டுகோளில் அதிசயித்த அன்னை, இத்தனை நாளும் தான் கேட்டதற்கு மறுத்தவன், இப்படிக் கேட்டது அவனது மனதில் உதித்த காதலின் வேலை என்பதைப்புரிந்து கொண்டார். தன் மருமகளை அன்பு ததும்ப பார்த்தவர், வேண்டுமென்றே
“நான் வேற பெண் பார்த்தால்?” என்றார்.
“நான் கல்யாணமே பண்ணாம வாழ்ந்திடுவன்” என்றான் குழந்தைபோல முகத்தை வைத்துக்கொண்டு.
மகனின் தலையில் செல்லமாய் குட்டிய தாயார், “போக்கிரி---உன்னை” என்றார் சிரிப்போடு.
ஏற்பாடுகள் விரைந்து நடந்தன. அவனது தாயார் பெண்கேட்கச் சென்றதும், அவளது வீட்டில் சம்மதித்ததும் அவளிடம் தானே கேட்கவேண்டும் எனக்கூறி நேரிடையாகவே அவளிடம் பேசியதும், அவள் விழிவிரித்து ஆச்சரியப்பட்டு, அந்த விழிகளுக்குள் அவன் தொலைந்து மீண்டு, அப்பப்பா, இப்போதும் தேகம் சிலிர்த்தது அவனுக்கு.
நாட்கள் ஆனந்தமாய் நகர்ந்தன. திருமணத்திற்கு தேதி குறித்தனர். ஆடைகள் வாங்கச் செல்லும் போது அவளையும் கூட்டிச்செல்லவேண்டும் என அவன் அம்மாவிடம் கேட்க, கூடப்பிறந்தவர்களும் மைத்துனனும் சேர்ந்து அவனை ஒருவழி பண்ணிவிட, அம்மாவும் அவனது ஆசைப்படியே செய்ய பூவழகியையும் அழைத்துச் சென்றனர். எல்லோரும் ஆடைத்தெரிவில் மூழ்கிவிட அவன் மட்டும் அவளது விழி பேசும் பாஷைக்குள் தொலைந்த கதை அவர்கள் இருவரையன்றி யாருக்குத் தெரியும்?
ஒரு வாரத்தில் திருமணம், ஒரு மாத விடுப்பு, அன்று இரவுக்கடமையுடன், அவளது பணி இனி கல்யாணத்தின் பின்னரே என்ற நிலையில் தான் அந்தச்சம்பவம் நிகழ்ந்தது. அவசரமாய் பத்து வயது பெண் குழந்தை ஒன்றை யாரோ வல்லுறவு செய்து அருகிலிருந்த பழைய மண்டபத்தில் போட்டிருந்தனர், என கொண்டு வந்தனர் சிலர். அந்த பச்சைக் குழந்தையை அவர்கள் செய்திருந்த கோரம், அவளது தொழிலில் இன்றுதான் இத்தகைய ஒரு சம்பவத்தைக் கண்டிருக்கிறாள். சிகிச்சை செய்துகொண்டிருந்த போதே மயங்கிச்சரிந்தாள் பூவழகி. அவசரமாய் முதலுதவி வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டாள். இதனை கோமகன் வீட்டிற்கு அறிவிக்கவில்லை பூவழகி வீட்டினர்.
மறுநாள், நேரங்கழித்து எழுந்தவள், புகைபடிந்த ஓவியமாய் அறையைவிட்டு வெளியே வந்தாள். அப்போதுதான் பார்த்தாள், நிறுத்தப்பட்டிருந்த அவளது அலைபேசியில் கோமகன் அழைத்த பத்திற்கு மேற்பட்ட அழைப்புகள் தவறிய அழைப்பாக இருந்தது.
அவசரமாய் தாயை அழைத்தவள், “அம்மா எனக்கு கல்யாணம் வேண்டாம்” என்றாள். அதிர்ச்சியில் உறைந்தது குடும்பம்.
“என்ன”
“என்னம்மா சொல்றாய்?”
“என்னடி தலையில கல்லைப்போடுறாய்?” என பல குரல்கள் ஏககாலத்தில் ஒலித்தன.
எதுவும் பேசாது மெளனமே காத்த பூவழகி, மெல்ல நிமிர்ந்த போது அவள் விழிகள் நீரால் நிறைந்திருந்தன. கண்களை மூடித்திறந்தவள்,
"யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவேண்டாம், அப்பிடி செய்தா நான் உயிரோடவே இருக்கமாட்டன்” என்றாள்.
அவளது பதிலில் இடிந்துபோன குடும்பத்தினர் எதுவும் பேசவில்லை. அவளும் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.
பூவழகியின் அப்பாதான் முதலில் சுதாகரித்தார். மனைவியை அழைத்தவர், “உடனே அவங்களுக்கு தகவலை சொல்லிடணும்” என்றார்.
“நீங்களே சொல்லுங்கோ “ என்ற மனைவியை கலக்கமாய் பார்த்தவர், “சரி” என்றபடியே கோமகனின் தாயாரின் இலக்கத்தினைத் தட்ட மறுமுனையில் பதிலின்றிப்போகவே கோமகனின் அலைபேசிக்கு அழைத்தார்.
“ஹலோ, மாமா சொல்லுங்க,” உட்சாகமாய் வந்தது அவனது குரல்.
“அம்மா இல்லையா? அவங்களோட பேசத்தான், அவங்க போன் பதில் இல்லை, அவசரம் அதனால-“ மாமனாரின் குரலில் பதற்றத்தை உணர்ந்தவன்,
“ என்ன மாமா, ஏதாவது பிரச்சினையா?” என்றான்.
“இல்லை ---அது---வந்து ---அதற்குள் தாயார் அருகில் வந்துவிட “அம்மாட்ட குடுக்கிறன்,” என்றபடி தாயாரிடம் கொடுத்தான் அலைபேசியை.
“அது வந்து ----என் மகள் ---பூவழகி” ஏதேதோ சொல்லி கடைசியில் 'அவளுக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை' என்ற தகவலைச் சொல்லிமுடித்தார்.
“என்ன சொல்றீங்க அண்ணா, அவ சம்மதிச்சுத்தானே -----இப்ப இப்பிடி---என்ன இது?” பதற்றம் அவரையும் தொற்றிக்கொண்டது.
“என்னம்மா---என்னாச்சு “ அவசரமாய் கேட்ட மகனிடம் ஏதும் சொல்லாது அலைபேசியை நிறுத்தினார்.
மனதை அசைத்த பதற்றம் உடலையும் தொட்டுவிட சற்றே தடுமாறியவரை கைபற்றி அமர்த்தினான் கோமகன்.
“சரி – சரி முதல்ல இருங்கோ” என்றவனின் குரல் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தனர் மற்றவர்கள். மகனின் தலையை தடவியவர்,
“நீ மனசை விட்றாத, எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்” என்றார்.
எதுவும் புரியாது பார்த்த மகனிடம் ஒருவாறு விபரத்தை சொல்லிமுடித்தார்.
“அம்மா, நான் பூவழகியை பாத்திட்டு வர்றன்” என எழுந்த மகனை கைபற்றி நிறுத்தியவர், “இரு நானும் வர்றன்” என எழுந்து கொண்டார்.
அவசரமாய் வந்த கோமகனையும் தாயாரையும் தூரத்திலேயே கண்டுவிட்ட பூவழகி, அறைக்குள் சென்று கதவைப்பூட்டிக்கொண்டாள். வீட்டினர் அவர்களை வரவேற்று, அவர்கள் பூவழகியிடம் பேசவேண்டும் என்று சொன்னபோதுகூட அவள் வெளியே வரவில்லை. அவள் கோமகனைப் பாக்கவிரும்பவில்லை, என்பதை சொல்லியது அந்தச்செயல்.
கொதித்துப்போன கோமகன், அவளது அறைவாசலில் நின்று கத்த ஆரம்பித்தான்.
“ஏய், நீ மெளனமா இருந்தா என்ன அர்த்தம், எனக்கு காரணம் சொல்லு, இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”
அவசரமாய் எழுந்து அவ்விடம் வந்த கோமகனின் தாயார்,
“கோமகன், வா போகலாம், இப்ப எதுவும் பேசவேணாம், இதைப்பற்றி வீட்டுக்கு போனதும் பேசலாம், என்றார்.
“இல்லைம்மா, இது அவளுக்கு மட்டுமான பிரச்சனை இல்லை, என் தன்மானத்தை பாதிக்கிற விசயம், எனக்கு காரணம் தெரியணும், இவ சொல்லட்டும், பிறகு போகலாம்” என்றான்.
“சரி, நான் பேசுறன், நீ பேசாமல் இரு" என்றவர், "பூவழகி, இத பாரம்மா, எனக்கு நீ வேற, கோமகன் வேற இல்ல, அவனுக்கு பாதியா ஆகப்போற உன்னிலையும் அவனளவுக்கு பாசம் எனக்கிருக்கு, இப்ப கூட உன்னில எனக்கு எந்த கோபமும் இல்லை, என்ன பிரச்சனையோ என்று மனசு பதறுது, காரணம் என் மகனா இருந்தாலும் உண்மையைச் சொல்லு, தண்டனை எல்லாருக்கும் பொதுவானது. இப்ப இல்லாட்டியும் எப்ப என்னோட பேச நினைச்சாலும் உடனே போன் பண்ணு” என்றார்.
“அம்மா ---என்னம்மா “கேட்ட மகனை சைகையால் அடக்கினார்.
கோமகனின் அம்மா மகளிர் பாடசாலையில் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். பல மாணவிகளை தன் சொந்த மகள்களாக எண்ணி கற்பித்தவர். பருவ வயது பெண் பிள்ளைகளின் மனநிலை புரிந்தவர்.
சட்டென்று கதவு திறந்தது, ஓடிவந்து அவரைக் கட்டிக்கொண்டு குலுங்கி அழுதவளை அணைத்து ஆறுதல்படுத்தியவர், “முதல்ல போய் குளிச்சிட்டு ஏதாவது நல்ல புத்தகம் படி, எல்லாம் பிறகு பேசலாம்” என்றவரை ஆதூரமாய் பார்த்தபடி சென்றவள் கோமகனை திரும்பிக்கூட பார்க்கவில்லை.
கோபத்தின் உச்சியில் இருந்த மகனிடம் “அம்மா சொல்றதைக்கேள், வா போவம்” என இழுத்துக்கொண்டு சென்ற தாயின் பின்னால் உடைந்துபோய் நடந்தான் கோமகன்.
வீட்டிற்கு வந்தவர், சத்தமின்றிச் சில வேலைகளைச் செய்தார். வைத்தியசாலைக்கு அழைப்பினை எடுத்து கடைசியாக அங்கு என்ன நடந்தது என்பதனைக் கேட்டறிந்தார். மகனை அருகில் அழைத்தவர், “ கோமகன், அம்மா சொல்றதை கவனமா கேள், பூவழகி மேல எந்த பிழையும் இல்லை, அவளுக்கு வந்திருக்கிறது ஒரு மனநிலைக் கோளாறு,” எனத்தொடங்கி அன்றைய சம்பவத்தை விபரித்தார். "அவ கல்யாணத்துக்கு மறுக்க காரணம் நீயில்லை", "பயம்"
," தாம்பத்தய வாழ்க்கைமேல இருக்கிற பயம், அத எப்பிடியாவது போகவைக்கவேணும், கல்யாணத்துக்கு ஒரு மாசம் இருக்கு, அவளுக்குத் தெரியாமலே ஏற்பாடுகளை கவனிப்போம், அவளுக்கு கூடுதலா லீவு கேட்கவேணும், அதைப்பிறகு பாக்கலாம், நீ இப்போதைக்கு இங்க இருக்க வேணாம், வேலை விசயமா சிங்கப்பூர் போகோணும் என்று சொன்னியே, இப்பவே போயிட்டு வந்திடு” என்றார்.
தாயை ஆச்சரியமாய் பார்த்தவன், “சரிம்மா” என்றான்.
‘அவளைப் பாக்காம ஒரு வார்த்தை கூட பேசாம’ மனசு முரண்டுபிடித்தது.
அவனது முகம் பார்த்தே அவனது மனநிலையை கணித்துக்கொண்ட தாயார், “காயத்துக்கு சிகிச்சை தரும்போது வலிக்கத்தான் செய்யும், வலிக்கிறதைப் பாத்தா காயம் குணமாகாது” என்றார்.
உடனே செல்வதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றுவிட்டான்.
அன்றே பூவழகி வீட்டிற்குச் சென்றவர், கோமகன் வெளிநாடு சென்றுவிட்ட விபரத்தைக் கூறி அவளை தன்னோடு வீட்டிற்கு அனுப்புமாறும் தனக்கு சற்று ஆறுதலாக இருக்கும் எனவும் கேட்டுக்கொள்ள அவளது உண்மை நிலையை அறிந்திருந்த பெற்றவர்கள் இருவரும் சம்மதித்து அவளுக்கு ஏதேதோ சொல்லி அனுப்பிவைத்தனர்.
மறுநாளே அவளை வெளியில் செல்லலாம் எனக்கூறி தனது தோழியான மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்று அவளுக்குத்தெரியாமலே அவளுக்கு சிகிச்சை கொடுத்தார். சாதாரண உரையாடல் போலவே அவளது மனநிலை அறிந்து சிகிச்சையும் வழங்கிய வைத்தியர், படிப்பதற்காக சில புத்தகங்களையும் அவளோடு எப்படி எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை கோமகனின் தாயாரிடமும் கூறி தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் கூட்டிவருமாறும் சொல்லி அனுப்பிவைத்தார்.
இரண்டு வாரங்கள் ஓடிமறைந்தது. மெல்ல மெல்ல பழைய பூவழகியும் தேறியிருந்தாள். அப்போதுதான் கோமகன் இல்லாத ஏக்கம் அவளை வாட்டத் தொடங்கியது. மாமியாரிடம் பேச்சுப்போக்கில் அவனது இலக்கத்தை கேட்டுவைக்க உடனே மகனுக்கு தகவல் சொன்ன கோமகனின் அம்மா, “இனி நீ வரலாம்” என்றார்.
அன்று வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் பூவழகி. “இந்தாம்மா, மாடியில கோமகன் இருக்கிறான், இந்த தேநீரை அவனுக்கு குடுத்திட்டு வா, வீட்டுக்குப் போவம்” என்ற மாமியாரை ஆச்சரியமாய் பார்த்தவள்
“எப்ப வந்தான்?” என எண்ணியபடியே நடந்தாள்.
மெல்ல அவனது அறைக்குள் நுழைந்து தேநீரை மேசையில் வைத்தவள், அவனைக் காணாது விழிகளைச் சுழற்றினாள். சுவரோரமாய் அவளையே பார்த்தபடி நின்றவனைக் கண்டதும் தலைகவிழ்ந்துகொண்டாள்.
“என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ” அவளது மென்மையான வார்த்தைகளில் அவளருகில் வந்தவன்,
“கல்யாணம் என்றது வெறுமனே உடல் சார்ந்தது என்றா நினைத்தாய் , அது நேசங்களால் தான் உயிர்ப்பிக்கப்படுது, மனசில விரிசலோ, ஏன், சின்னதா ஒரு மருவோ வந்திட்டா கூட இல்லற பந்தம் அர்த்தமில்லாம போயிடும், என்னை என்ன நினைச்சாய், உன் அளவுக்கு உன் உணர்வுகளையும் நேசிக்கிறன், எதுவா இருந்தாலும் என்னோட மனம்விட்டு கதை, முதல்ல நான் உனக்கு எப்பவும் நல்ல தோழன், அதுக்குப்பிறகுதான் கணவன்” என்றான்.
அவனது வார்த்தைகளில் உருகி நிமிர்ந்தவள், “ நான் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கிறன், உங்களை மாதிரி கணவர், அருமையான மாமியார் கிடைக்க” என்றவள் “வீட்டுக்குப் போகணும்” என்றாள்.
“ரெண்டு வாரத்தில திரும்ப இங்கதானே வரணும்” அவன் சொல்ல, சிவந்த முகத்துடன் புன்னகை பூசிக்கொண்டு விரைந்து ஓடினாள் வெளியே.
“அப்பாடா, பழைய மாதிரி ஆகிட்டா,” பெருமூச்சோடு வெளியே பார்த்தான், அவனைப் பார்த்த அன்னை, கனிவான சிரிப்புடன் விரலை உயர்த்திக் காட்டிவிட்டு பூவிழியைக் கரம்பற்றியபடி அழைத்துச்சென்று கொண்டிருந்தார்.
தூரத்தில் எங்கோ பாடல் ஒலித்தது.
இது காதலின் சங்கீதம்,----- புது குங்கும சந்தோசம்,------ மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் -----ஶ்ரீ தேவியின் கல்யாணம்------
ஆசிரியர்பீடம்,
தமிழருள் இணையத்தளம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கோரமான பாலியல் வல்லுறவுகள் எங்கோ ஒரு பெண்ணின் மனதை இப்படி காயப்படுத்துகிறது. புரிந்துகொள்ளுங்கள்.
கோபிகை.ஆசிரியர்பீடம்,
தமிழருள் இணையத்தளம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை