தன்நலமற்ற சேவையே தேசத்தின் தேவை - வைத்தியர் மாறனுக்கு பாராட்டுகள்!!
சம்பவம் பற்றி தெரியவருவதாவது
கடந்த 14 ஆம் திகதி யாழ் இந்து மகளீர் கல்லுாரிக்கு அருகில் அன்னசத்திரவீதிக்கு அருகில் உள்ள ரயில் பாதையில் நண்பகல் சென்ற ரயிலில் அடிபட்டு பசு மாடு ஒன்று காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளது.
மாடு அடிபட்டுக் கிடப்பதை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இந் நிலையில் அன்று இரவு 8 மணியளவில் இவ்வாறு மாடு ஒன்று கவனிப்பாரற்று காயங்களுடன் இரயில்பாதைக்கு அருகில் கிடக்கின்றது என யாழ்ப்பாணப் பிரதேசசெயலாளருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
யாழ்ப்பாணப் பிரதேசசெயலாளர் இது தொடர்பாக தனக்குத் தெரிந்த மிருகவைத்தியர் மாறன் என்பவரைத் தொடர்பு கொண்டார். குறித்த மிருகவைத்தியர் இரவு வேளை என்றும் பாராது உடனடியாக செயற்பட்டு, தனது செலவிலேயே ஓட்டோ ஒன்றை ஒழுங்கு செய்து வைத்திய உபகரணங்களுடன் அந்த இடத்துக்கு விரைந்து சென்று குறித்த பசு மாட்டுக்கு சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க வைத்துள்ளார். அதன் பின்னர் தற்போது அந்த பசு மாடு காரைநகர் வைத்திய அதிகாரி பரா.நந்தகுமாரின் வீட்டில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றது. இவ்வாறான காருண்யமான சேவையைச் செய்யும் மிருக வைத்தியர் மாறன் உட்பட்டவர்கள் மிகவும் போற்றப்படக்கூடியவர். வாழ்க அவர்களின் தன்னலமற்ற சேவை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை