பொதுமக்கள் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!!📷

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக, தூக்கு தண்டை நிறைவேற்றப்பட வேண்டும் என கோரி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.



ஜனாதிபதி செயலகத்திலிருந்து கொழும்பு, கொச்சிகடை அந்தோனியார் ஆலயம் வரை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடைபவனி மேற்கொண்டிருந்தனர்.

மரணத்தண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பான ஆணையில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார்.

எனினும், அந்த தீர்மானத்திற்கு உச்ச நீதிமன்றத்தினால் இடைகாலம் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரமின்றி, கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுதாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் இந்த தூக்குதண்டை நிறைவேற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.