பிரித்தானியாவுக்குள் பல மில்லியன் வண்ணத்துப்பூச்சிகள்!!

மில்லியன் கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளன என்று சூழலியலாளர்கள்  தெரிவித்துள்ளனர்.


பொதுவாக கோடை காலங்களில் பலவர்ண பெண் வண்ணத்துப்பூச்சிகள் பிரித்தானியாவுக்கு பறந்து வருகின்றன.

ஆனால் 10 வருடங்களுக்கு ஒருமுறை மில்லியன் கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் பிரித்தானியாவுக்கு இடம்பெயர்கின்றன.

வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பறந்துவரும் வண்ணத்துப்பூச்சிகளைக் கணக்கிட தன்னார்வலர்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்த அதிசய நிகழ்வு நடந்தபோது சுமார் 11 மில்லியன் பலவர்ண பெண் வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்ந்திருந்தன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.